Connect with us

குணா குகையில் இருந்து நான் எடுத்த அதிசய பொருள்.. இன்னொரு படத்துல பயன்படுத்தியிருக்கேன்!.. கமல் சொன்ன சீக்ரெட்!..

kamalhaasan

Cinema History

குணா குகையில் இருந்து நான் எடுத்த அதிசய பொருள்.. இன்னொரு படத்துல பயன்படுத்தியிருக்கேன்!.. கமல் சொன்ன சீக்ரெட்!..

Social Media Bar

Kamalhaasan: குழந்தையாக சினிமாவில் நடிக்க துவங்கிய பிறகு கமல்ஹாசன் சினிமாவைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு நிறைய வெளிநாட்டு திரைப்படங்களை பார்க்க துவங்கினார் கமல்ஹாசன்.

அந்த தரத்தில் தமிழ்நாட்டில் படங்களை கொண்டு வர வேண்டும் என்பது கமல்ஹாசனின் பெரும் ஆசையாக இருந்தது. அதனால்தான் கமல் தயாரிப்பில் அவரே நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு சினிமாக்களின் தாக்கத்தில்தான் இருக்கும்.

kamalhaasan
kamalhaasan

தமிழில் கூட குணா, அன்பே சிவம், ஆளவந்தான் மாதிரியான வித்தியாசமான திரை கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தவர் கமல்ஹாசன் அதேபோல நிறைய புத்தகம் படிக்கக் கூடியவர் கமலஹாசன். பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கூட அடிக்கடி நிறைய புத்தகங்களை அவர் பரிந்துரை செய்வதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் குணா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது அங்கு நடந்த சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் கமல்ஹாசன். குணா திரைப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட குகையானது இளம் பாறைகளால் ஆனது. அந்த பாறைகளில் துளையிட்டு எதையும் குத்தி ஏறவும் இறங்கவும் முடியாது.

கமலுக்கு கிடைத்த புதையல்:

ஏனெனில் அதில் உள்ள மண் உடனே சரிந்து விடும் கடினமான பாறையாக இல்லாமல் இலகுவாக பாறையாகவே அவை இருந்தன. இதனால் அந்த குகையில் ஏதேனும் ஒரு விலங்கு தவறி விழுந்து விட்டால் திரும்ப அவை மேலே செல்வது என்பது நடக்காத காரியம்.

அங்கேயே பட்டினி கிடந்து இறக்க வேண்டியதுதான் இப்படியாக பிறந்து சில நாட்களே ஆன குரங்கு குட்டிகள் அங்கு விழுந்து இறந்து அவற்றின் எலும்புக்கூடுகள் கிடந்தன. இப்படி இருந்த மூன்று குரங்கு குட்டிகளின் எலும்புக்கூடு மண்டை ஓட்டை கமல்ஹாசன் எடுத்துக் கொண்டார்.

பிறகு அதை ஹே ராம் திரைப்படத்தில் அவர் பயன்படுத்தியிருந்ததாக ஒரு பேட்டியில் கூடி இருக்கிறார். இப்படி சின்ன சின்ன விஷயங்களை கூட நுட்பமாக அறிந்து அவற்றை சேகரித்து வைக்கும் ஒரு நபராக கமல்ஹாசன் இருந்துள்ளார் என இதன் மூலம் தெரிகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top