வாய்ப்புக்காக எடுபிடி வேலைகள் செய்த கமல்!.. சும்மா ஒன்னும் இந்த உயரத்திற்கு வரல!..

கமல்ஹாசனை கதாநாயகனாகத்தான் பலருக்கும் தெரியும் ஆனால் கதாநாயகன் ஆவதற்கு முன்பு கமல்ஹாசன் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார். ரஜினிகாந்த் அல்லது மற்ற நடிகர்களைப் போலவே ஒவ்வொரு படத்திலும் வாய்ப்பு கிடைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலையில் கமல்ஹாசன் இருந்திருக்கிறார்.

முதன் முதலாக களத்தூர் கண்ணம்மா என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கமல்ஹாசன், ஏவி மெய்யப்பன் செட்டியார் அவர்கள்தான் கமல்ஹாசனை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். அதற்குப் பிறகு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே கமல்ஹாசன் நடித்தார்.

Social Media Bar

ஆனால் கமல்ஹாசன் வளர துவங்கிய பிறகு அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கின. அப்போது சினிமாவில் எந்த ஒரு வேலை கிடைத்தாலும் செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்தார் கமல்ஹாசன். இந்த நிலையில் இயக்குனர் எம் ஏ திருமுகம் அவர்களின் மாணவன் என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருந்தது.

அந்த திரைப்படத்தில் எப்படியாவது வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைத்தார் கமல்ஹாசன். எந்த வேலை கிடைத்தாலும் அந்த திரைப்படத்தில் அதை செய்யலாம் என்று முடிவெடுத்திருந்தார். ஆனால் ஏற்கனவே ஆறு உதவி இயக்குனர்கள் அந்த திரைப்படத்தில் பணிபுரிந்தனர்.

அதனை தாண்டி கமல்ஹாசனை வேலைக்கு சேர்த்துக் கொள்வது கடினம் இருந்தாலும் அந்த ஆறு உதவி இயக்குனர்களுக்கு எடுபுடி வேலை பார்க்கும் ஒருவராக கமல்ஹாசன் அந்த படத்தில் போய் சேர்ந்தார். அதன் பிறகு அந்த படத்திலேயே அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அந்த அளவிற்கு ஒவ்வொரு திரைப்படத்தின் வாய்ப்பிற்காகவும் பெரிதாக கஷ்டப்பட்டு இருக்கிறார் கமல்ஹாசன்.