Tamil Cinema News
மொத்தமே இவ்வளவுதானா? 3 நாளில் கங்குவா செய்துள்ள கலெக்ஷன்.!
Actor Surya’s recently released movie kanguva was a huge hit among the masses. This movie is directed by Siruthai Siva. As far as kanguva is concerned, expectations about the film were high even before its release.
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். கங்குவா திரைப்படத்தை பொறுத்தவரை இந்த படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இந்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வந்தன.
இந்த படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இயக்குனர் சிறுத்தை சிவாவும் நடிகர் சூர்யாவும் இந்த படம் குறித்து நிறைய எதிர்பார்ப்பை உருவாக்கி வந்தனர்.
இதுவரை இந்திய சினிமாவில் வந்த திரைப்படங்களில் இது புது ரகமாக இருக்கும் என்றெல்லாம் கூறி வந்தனர். ஆனால் தற்சமயம் கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வசூலை கொடுக்கவில்லை. முதல் நாளை பொறுத்தவரை கங்குவா திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது.
கங்குவா வசூல்:
ஏனெனில் முதல் நாள் இந்த திரைப்படம் அதிக வரவேற்போடு வெளியானதால் முக்கால்வாசிக்கு திரையரங்குகள் முழுமை அடைந்து விட்டன. ஆனால் நாட்கள் செல்ல செல்ல படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் படத்தின் வசூலை பாதித்திருக்கிறது.
இந்த நிலையில் மூன்று நாட்களில் மொத்தமே 70 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளது கங்குவா திரைப்படம் என்று கூறப்படுகிறது. கங்குவா திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 350 கோடிதான். அப்படி இருக்கும் பொழுது படம் வெளியான ஒரு வாரத்தில் அந்த தொகையை கலெக்ஷன் செய்ய வேண்டும் இல்லை என்றால் படம் தோல்வி படமாக அமைந்து விடும் என்று கூறப்படுகிறது.
