Tamil Cinema News
என்ன விட வயது கூட உள்ளவங்க கூட எப்படி?.. அஜித் படம் குறித்து பேசிய கனிகா..!
தற்சமயம் சின்னத்திரை மூலமாக அதிக பிரபலமாக இருந்து வருபவர் நடிகை கனிகா. இவர் சன் டிவியில் நடித்த எதிர்நீச்சல் சீரியல் அதிக பிரபலமடைந்தது. அதனை தொடர்ந்து இவரும் கூட பிரபலமானவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் துவங்கியிருக்கும் எதிர்நீச்சல் சீரியலின் அடுத்த பாகத்திலும் இவர் நடித்து வருகிறார்.
சீரியலில் நடிப்பதற்கு முன்பு இவர் சினிமாவில்தான் நடித்து வந்தார். நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் கதாநாயகியாகவும் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் வரலாறு திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும்போது வரலாறு திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாகவும் நடித்திருந்தேன். அவருக்கு அம்மாவாகவும் நடித்திருந்தேன். ஏனெனில் அந்த படத்திற்கு அது தேவையாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல எனக்கு பட வாய்ப்பு கொடுக்கும் எல்லோருமே அம்மா கதாபாத்திரத்திற்கே நடிக்க அழைத்தார்.
நான் அம்மா கதாபாத்திரத்திற்கு எதிரானவள் அல்ல. ஆனால் அம்மா நடிகை என்றே சினிமாவில் தரம் பிரிப்பதுதான் கவலையளிக்கிறது. அம்மா என்பது ஒரு கதாபாத்திரம் மட்டுமே. இந்த நிலையில் என்னை விட அதிக வயது உள்ள நடிகர்களுக்கு எல்லாம் என்னை அம்மாவாக நடிக்க சொல்கிறார்கள்.
மனசாட்சியுடன் தான் இதை சொல்கிறார்களா என தெரியவில்லை என கூறியுள்ளார் கனிகா.
