தளபதி 67 இல் இணைய இருக்கும் கன்னட ஹீரோ? லிஸ்ட் பெருசா போகுதே!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து அடுத்து தயாராகிவரும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

ஏனெனில் வளர்ந்து வரும் இயக்குனராக இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு தனி ஆர்வம் உருவாகிவிடுகிறது. அந்த அளவிற்கு தமிழில் பெரும் ஹிட் கொடுக்கும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.

அவர் இயக்கி வரும் தளபதி 67 திரைப்படத்தில் ஏற்கனவே த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன் சுர் அலிக்கான், ப்ரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. மேலும் இதில் பிக்பாஸ் புகழ் ஜனனியும் நடிக்க உள்ளதாக தகவல்கள் இருந்தன.

இந்த நிலையில் கன்னட சினிமாவில் பிரபலமான நடிகரான ரக்‌ஷித் ஷெட்டி இந்த படத்தில் நடிக்க உள்ளதாக பேச்சுக்கள் அடிப்படுகின்றன. ரக்‌ஷித் ஷெட்டி ஏற்கனவே 777 சார்லி, அவனே ஸ்ரீமன் நாராயணா, போன்ற திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

அவர் இந்த படத்தில் நடிக்கும் பட்சத்தில் தளபதி 67 கன்னட சினிமாவில் வசூல் சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என கூறப்படுகிறது.

Refresh