Tamil Trailer
இவ்வளவு பெரிய பட்ஜெட்டா? காந்தாரா 2 குறித்து வீடியோ விட்ட இயக்குனர்..!
இயக்குனர் ரிஷப் செட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா. இந்த திரைப்படம் எக்கச்சக்கமான வசூலை பெற்று கொடுத்தது.
கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹம்பாளே பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தையும் தயாரித்தது. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது.
அடுத்து இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்தை இயக்க துவங்கினார் ரிஷப் செட்டி. ஆனால் இரண்டாம் பாகம் துவங்கியது முதலே நிறைய அசம்பாவிதங்கள் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகின்றன.
இதனால் பல அச்சத்திற்கு நடுவில் தான் படப்பிடிப்பு என்பதே நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இதனை போக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
படப்பிடிப்பு நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாகவும் கடவுளே தனக்கு துணையாக இருப்பதாகவும் அதில் தெளிவு செய்திருக்கிறார் ரிஷப் செட்டி அந்த வீடியோ இப்பொழுது அதிக வைரலாக துவங்கியிருக்கிறது.
