தீபாவளியில் இருக்கு சம்பவம்- சிவகார்த்திக்கேயனா? கார்த்தியா?

தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் இரு முக்கிய கதாநாயகர்களாக கார்த்தியும், சிவகார்த்திகேயனும் உள்ளனர். டாக்டர், டான் என வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்துள்ளதால் சிவக்கார்த்திகேயனுக்கு தமிழ் சினிமா மார்க்கெட்டில் ஒரு நல்ல பெயர் உருவாகியுள்ளது.

Social Media Bar

தற்சமயம் தயாராகி தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் பிரின்ஸ் திரைப்படமும் கூட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் கார்த்தி சமீபத்தில் சிவகார்த்திகேயன் அளவில் வெற்றி படங்கள் தரவில்லை என்றாலும் கூட, தற்சமயம் வெளியான பொன்னியின் செல்வன் அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்தார் படத்தில் அவர் பல வேடங்களில் நடித்திருப்பதால் பலரும் அந்த படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். எனவே இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவில் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.

சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ் மித்ரன் எப்போதுமே வித்தியாசமான கதைகளத்தை கொண்டு படம் இயக்குபவர். அவர் ஏற்கனவே இயக்கிய இரும்பு திரை மற்றும் ஹீரோ இரு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற படங்கள் எனலாம்.

ஆனால் பிரின்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் அனுதீப்பிற்கு இதுதான் முதல் படம் என்பதால் இயக்குனர் என்ற வகையில் பி.எஸ் மித்ரன் மீது அதிக எதிர்ப்பார்ப்புகள் இருந்து வருகிறது.

இந்நிலையில் இரண்டு திரைப்படங்களுமே அக்டோபர் 21 அன்று தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கின்றன. இரண்டுமே நல்ல படங்களாக இருந்தாலும் கூட, அவை ஒரே சமயத்தில் வெளியாகும்போது அது அவர்களது வசூல் சாதனையில் பின்னடைவை ஏற்படுத்தலாம். என சினி வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன.