கனவுகளின் உலகம் – நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் புது மந்திர தொடர்

பல புதுமையான தொடர்களை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. ஆனால் அவற்றில் பலவும் ஆங்கில மொழியில் இருப்பதால் தற்சமயம் மக்களும் ஆங்கில தொடரை பார்ப்பதில் விருப்பம் காட்டி வருகின்றனர். 

சில நாட்களுக்கு முன்பு நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட ஒரு மேஜிக் தொடர் பற்றி இப்போது பார்க்கலாம். முதலில் ஒரு இளம்பெண் தனது தந்தையுடன் ஒரு லைட் ஹவுசில் வாழ்ந்து வருகிறாள். அவரது தந்தை தினமும் அவளுக்கு விசித்திரமான மந்திர கதைகளை கூறி வருகிறார். ஆனால் அவர் இறந்துவிடவே வெறொரு நபர் அவளை தத்தெடுக்கிறார். இந்த நிலையில் தந்தையின் நினைவுடனே அந்த பெண் வாழ்ந்து வருகிறார்.

பிறகு, ஒரு நாள் இரவில் அந்த பெண் தூங்கும்போது கனவு உலகித்திற்கு செல்கிறாள். அந்த உலகின் பெயர் ஸ்லம்பர்லேண்ட். இந்த உலகம் கனவுகளால் நிறைந்தது. அந்த கனவுலக தலைவர் அந்த பெண்ணிடம் அவர் இழந்த தந்தையை பற்றி கூறுகிறார்.

அப்போது அந்த பெண்ணின் தந்தை தனக்கு நண்பர் எனவும் இருவரும் ஒரு புதையலை தேடி வந்தோம் என்றும் கூறுகிறார். தன் தந்தை தேடிய புதையலை கண்டறிய அந்த பெண் கனவுலகில் மேற்க்கொள்ளும் சாகச பயணமே இந்த சீரிஸ்.

ட்ரைலரே பார்ப்பதற்கு விறு விறுப்பாக இருப்பதால் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் சீரிஸாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த கதை 1989 ஆம் ஆண்டு வந்த லிட்டில் நெமோ (அட்வெஞ்சர் ஆஃப் ஸ்லெம்பர் லேண்ட்) என்ற படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.

ஹாலிவுட்டில் ஹங்கர் கேம்ஸ், ஐ அம் லெஜண்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஃபிரான்ஸிஸ் லாரன்ஸ் இந்த சீரிஸை இயக்கியுள்ளார்.

Refresh