நான் நடிக்கிறத பாத்தியா நீ – ஜி.பி முத்துவை காண்டாக்கிய தனலெட்சுமி 

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று எப்போதும் எதிர்ப்பார்ப்போடு மக்கள் காத்துக்கொண்டிருப்பது வழக்கம். அதற்கு ஏற்றாற் போல அந்த நிகழ்ச்சியும் ஆரம்பமான நாளில் இருந்தே மிகவும் விறு விறுப்பாக சென்றுக்கொண்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து அவர்களும் சேர்ந்திருப்பதால் அவரது ரசிகர்களும் கூட இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். நிகழ்வில் உள்ள அனைவரும் பிரபலங்களாக அதே சமயம் நாகரிக நகரங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள், ஆனால் ஜிபி முத்து மட்டும் கிராமத்தை சேர்ந்த மனிதர் என்பதால் அவர் கிராம மக்களின் பிரதிநிதியாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனலெட்சுமிக்கும், ஜிபி முத்துவுக்கும் இடையே சண்டை ஆகி உள்ளது. அப்போது தனலெட்சுமி ரொம்ப ஓவரா நடிக்காதீங்க என ஜிபி முத்துவை பார்த்து கூற ஜிபி முத்து மிகவும் கோபமாகிவிட்டார்.

பிக்பாஸ் துவங்கியது முதல் இதுவரை ஜிபி முத்து எந்த சண்டையும் போடாத நிலையில் இன்று அவரையே சண்டை போட வைத்து விட்டார் தனலெட்சுமி என பலரும் அவரை குறித்து விவாதித்து வருகின்றனர். மேலும் பிக் பாஸ் துவங்கியது முதலே தனலெட்சுமி மேல் ஒரு எதிர்மறையான கருத்து மக்களிடையே நிலவி வருவதை பார்க்க முடிகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh