Bigg Boss Tamil
இந்த வார எலிமினேஷன் ஜி.பி.முத்துவா..? டார்கெட் செய்த டீம்! – பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி!
பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடந்து வரும் நிலையில் எலிமினேஷன் பட்டியலுக்கு ஜி.பி.முத்துவை நகர்த்த சிலர் திட்டமிடுவதாக தெரிகிறது.
பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் யூட்யூப் பிரபலம் ஜி.பி.முத்து, ஆயிஷா, ஜனனி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

ஜனனி, ஜி.பி.முத்து, ஆயிஷா ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் உள்ளனர். ஆனால் ஜி.பி.முத்து இந்த அணி என்று ஒதுங்கி இருக்காமல் அனைத்து போட்டியாளர்களுடனும் சகஜமாக இருப்பதும், உதவுவதும் சொந்த அணியினருக்கே கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் அதையெல்லாம் பற்றி அலட்டிக் கொள்ளாத ஜிபி முத்து தன் இயல்பிலேயே இருக்கிறார். இந்நிலையில் வெளியே உள்ள வாழைப்பழ பெட்டுக்கு யாரை ஸ்வாப் செய்வது என்ற முடிவில் ஜி.பி.முத்துவின் அணியினர் அவரை ஸ்வாப் செய்ய திட்டமிட்டுள்ளது ப்ரோமோவில் தெரிகிறது.
அந்த ப்ரோமோவில் பேசும் ஜி.பி.முத்து ‘இந்த ஊதா சட்டை போட்டிருந்தால் ஒரு பச்சை சட்டைக்காரர் தவறி விழுந்தால் தூக்கி விடுவது கூட தவறா?” என கேள்வி எழுப்பியுள்ளார். ஜி.பி.முத்துவுக்கு ஆதரவாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
