சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக இருந்த திரைப்படம்தான் ஜெயிலர். ஆனால் ஜெயிலர் திரைப்படம் குறித்து இன்னொரு வகையான பேச்சுக்கள் இருக்கின்றன.
ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தபோது ரஜினிகாந்திற்கு பெரிதாக பிடிக்கவில்லை என்றும் அது வெற்றி அடைந்ததை ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் ரஜினி நினைப்பதாகவும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் அந்த திரைப்படம் நெல்சனுக்கு பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது.
அதனை தொடர்ந்து நிறைய நடிகர்கள் நெல்சனிடம் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். ஆனால் அவர் அடுத்து ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் நெல்சன் என்பதால் அவர் மற்ற நடிகர்களுக்கு அவர் இப்பொழுது படம் செய்வதாக இல்லை.
இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடித்த திரைப்படங்கள் எல்லாம் போலீஸ் திரைப்படங்களாகவே இருந்து வருகின்றன. அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்பு நடித்த தர்பார் திரைப்படமும் போலீஸ் திரைப்படமாக இருந்தது.
அதனை தொடர்ந்து ஜெயிலர், தற்சமயம் நடித்துவரும் வேட்டையன் அடுத்து அவர் நடிக்கவிருக்கும் கூலி எல்லா திரைப்படத்திலும் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.
ஜெயிலர் 2:
அடுத்து ஜெயிலர் டூ விலும் போலீஸ் கதாபாத்திரத்திலேயே வருவது அவ்வளவு நன்றாக இருக்காது என்று நினைத்திருக்கிறார் ரஜினிகாந்த் இதனை தொடர்ந்து கூலி திரைப்படத்திற்கு பிறகு ஜெயிலர் 2 திரைப்படத்தில் அவர் நடிப்பதாக இல்லை என்று கூறப்படுகிறது.
ஒரு ஜாலியான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறார் ரஜினி எனவே இது குறித்து தற்சமயம் கார்த்திக் சுப்புராஜிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பேட்ட திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேச்சுக்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
பேட்ட திரைப்படம் ரஜினிக்கு வெகுவாக பிடித்திருந்ததாக கூறப்படுகிறது மேலும் பேட்ட திரைப்படத்தில் காமெடியாக இருக்கும் ரஜினியின் கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தது. எனவே இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க ஒரு காமெடியான கதாபாத்திரத்தில் அந்த படத்தை உருவாக்கினால் எப்படி இருக்கும் என்று டிஸ்கஷன் செய்து வருகிறாராம் ரஜினிகாந்த்.
எனவே ஜெயிலர் 2 திரைப்படம் இதனால் தள்ளிப் போயிருக்கிறது என்று கூறப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE