Cinema History
எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாத்திட்டார்.. கூட்டத்தில் ஸ்ரீதரை கோர்த்துவிட்ட கலைஞர் கருணாநிதி!..
தமிழில் திரைக்கதை எழுதும் பிரபலங்களில் முக்கியமானவர் கலைஞர் மு கருணாநிதி. கலைஞர் எழுதும் வசனங்களுக்கு அந்த காலகட்டத்தில் பெரும் வரவேற்பு இருந்தது. அதனால் வசனம் எழுதும் நபர்களிலேயே அதிகமாக சம்பளம் வாங்கியவராக கலைஞர் கருணாநிதி இருந்தார்.
அவர் வசனம் எழுதிய பராசக்தி மாதிரியான திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. மேலும் வசனங்களில் பல பல சமூகப் பிரச்சினைகளையும் பேசியிருந்தார் கலைஞர் கருணாநிதி. இந்த நிலையில் முதலமைச்சர் ஆன பிறகு திரைத்துறை சார்ந்த எந்த வேலையும் பார்க்காமல் இருந்தார் கலைஞர்.
அப்பொழுது இயக்குனர் ஸ்ரீதர் சிவந்த மண் என்கிற திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார். அந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்க இருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தை குறித்து கருணாநிதியிடம் பேசிய ஸ்ரீதர் படத்திற்கான திரைக்கதையை எழுதி தர முடியுமா என்று கேட்டார்.
அதற்கு கருணாநிதி ஒரு முதலமைச்சர் படத்திற்கான திரைக்கதையை எழுதுவது சட்டப்படி சரியா என்று எனக்குத் தெரியவில்லை. அதை நான் விசாரித்துவிட்டு சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார் கருணாநிதி. ஆனால் அதற்குப் பிறகு ஸ்ரீதர் கருணாநிதியை அணுகவே இல்லை.
ஆனாலும் சட்ட வல்லுநர்களிடம் இது பற்றி கருணாநிதி ஆலோசித்த போது அப்படி படத்திற்கு வசனம் எழுதுவதில் எந்த தவறும் இல்லை என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் சிவந்த மண் திரைப்படத்தை முழுவதுமாக முடித்த பிறகு அதன் வெளியீட்டு விழாவிற்கு கருணாநிதியை அழைத்து இருந்தார் ஸ்ரீதர்.
அங்கு வந்த கருணாநிதி படத்திற்கு திரைக்கதை எழுத ஆசைப்பட்ட போதும் திரும்ப ஸ்ரீதர் தன்னை அழைக்கவில்லை என்று மேடையிலேயே சொல்லிவிட்டார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்