Tamil Cinema News
நயன்தாராவை பார்த்து வந்த ஆசை.. வெளிப்படையாக கூறிய காவ்யா அறிவுமணி.!
தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் பலர் வந்து கொண்டிருக்கின்றனர். எப்பொழுதுமே சினிமாவில் நடிகைகளுக்கு மட்டும் பஞ்சம் இருந்ததே கிடையாது. சின்ன திரையில் இருந்து முயற்சி செய்யும் நடிகைகள் சமூக வலைத்தளங்கள் வழியாக முயற்சி செய்யும் நடிகைகள் என்று பல நடிகைகள் தொடர்ந்து சினிமாவிற்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
அப்படியான நடிகைகளில் நடிகை காவியா அறிவுமணியும் முக்கியமானவர் சன் டிவியில் சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார் நடிகை காவியா அறிவுமணி.
தற்சமயம் திரைப்படங்களில் இவர் நடிக்க துவங்கியிருக்கிறார். இந்த நிலையில் அவர் சென்னைக்கு வந்த ஒரு பெண்ணின் கதையை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது வெளி மாநிலத்திலிருந்து சென்னைக்கு வந்த ஒரு பெண் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது நகைக்கடை வாசலில் பெரிய விளம்பரத்தை பார்க்கிறார்.
அந்த விளம்பரத்தில் நயன்தாரா நின்று கொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த விளம்பரத்தை பார்த்து தானும் அந்த மாதிரியான ஒரு இடத்தை தொட வேண்டும் என்று கனவு காண்கிறார்.
தொடர்ந்து அதற்கான முயற்சிகளையும் செய்கிறார். அப்படியான விளம்பரங்களில் நடித்து பிறகு சீரியல்களில் நடித்து திரைப்படங்களிலும் வாய்ப்பை பெற்றார். அந்த பெண் வேறு யாரும் அல்ல நான் தான் என்று கூறியிருக்கிறார் காவ்யா அறிவுமணி.
இதன் மூலமாக நயன்தாராதான் தனக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக இருந்தார் என்பதை விளக்கி இருக்கிறார் காவியா அறிவுமணி.
