சர்ச்சை நடிகருக்கு ஜோடியாக களம் இறங்கும் கயாடு லோகர் – வேண்டாம் செல்லம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..
நடிகை கயாடு லோகர் தற்சமயம் ஒரு திரைப்படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று இருக்கிறார். கன்னடம், தெலுங்கு என்று நடித்து வந்த இவருகு தமிழில் டிராகன் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
டிராகன் திரைப்படத்தில் சிறிது நேரமே வருகிற காட்சிகளில் நடித்தாலும் கூட கயாடு லோகருக்கு என்ற ஒரு தனிப்பட்ட ரசிக்கப்பட்டாளமே உருவாகிவிட்டது. இந்த நிலையில் அடுத்து அதர்வா நடிக்கும் இதயம் முரளி திரைப்படத்திலும் கதாநாயகியாக கயாடு லோகர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்து நடிகர் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது. பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில்தான் கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாகவே சிம்புவுடன் ஒரு நடிகை சேர்ந்து நடித்தால் அந்த நடிகை சர்ச்சைக்கு உள்ளாவது வழக்கமான விஷயமாக இருக்கிறது எனவே கயாடு லோகர்க்கு அப்படி ஆகக்கூடாது என்று பேசி வருகின்றனர் ரசிகர்கள்.