Actress
உச்சப்பட்ச கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்.. ஹிந்தி தெறி பாடலை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து அவருக்கு இப்பொழுது ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியிருக்கின்றன.
தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் தெறி. இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்ததை அடுத்து இந்த படம் பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் வருண் தவான் இதில் கதாநாயகனாக நடிக்கிறார் இந்த திரைப்படத்தை அட்லீ இயக்கவில்லை ஆனால் அவர்தான் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார். தமிழிலேயே தெறி படம் நல்ல வெற்றியை கொடுத்ததால் ஹிந்திலும் பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நம்புகிறார் அட்லீ.
கீர்த்தி சுரேஷ் பாடல்:
இந்த நிலையில் இந்த படத்திற்கு பேபி ஜான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சமந்தா கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் பாலிவுட் என்றாலே அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்கிற நிலை இருக்கும்.
ஆனால் கீர்த்தி சுரேஷை பொருத்தவரை தமிழ் சினிமாவிலேயே அவர் பெரிதாக கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது. பாலிவுட்டில் எப்படி நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று இன்று வெளியாகியிருந்தது.
அந்த பாடலில் முழுக்க முழுக்க அதிக கவர்ச்சியாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதுவரை தமிழ் சினிமாவில் நடிக்காத அளவு கவர்ச்சியாக அது இருக்கிறது இதனை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
