Actress
ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!.. ட்ரெண்டிங் பிக்ஸ்!.
ஒரு சில நடிகைகள் அறிமுகமாகும் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வென்று விடுவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை இடம் பிடித்தவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் சமீபகாலங்களாக மாடன் உடையில் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தன் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணையத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை ஆவார். இவரின் தந்தை ஜி.சுரேஷ்குமார் ஒரு மலையாளி, தாயார் மேனகா தமிழ் நடிகை ஆவார். இவரின் தந்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளர்.
குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் மலையாளத் திரைப்படமான கீதாஞ்சலியில் தனது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக அவர் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.

பிறகு தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்திற்கும் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை இவர் பெற்றிருந்தார்.
அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரசிகர்களின் மனதை வென்றார். அதன் பிறகு அதே ஆண்டில் வெளிவந்த ரெமோ படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த வெற்றியின் காரணமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜயுடன் பைரவா, சர்க்கார் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பலரது கவனத்தையும் பெற்றார். இந்நிலையில் அவர் மகாநதி திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.
சமூக வலைத்தளங்களில் கீர்த்தி சுரேஷ்
இவ்வாறு பல படங்களில் நடித்து பல விருதுகளை பெறும் கீர்த்தி சுரேஷ், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் அங்கு தமிழ் படத்தில் வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
பல படங்களில் நடித்து வந்தாலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் கீர்த்தி சுரேஷ் தற்போது சற்று மாடனாகவும், கவர்ச்சியாகவும் உடை அணிகிறார். இந்நிலையில் இதை பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் அவரின் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

தற்போது கீர்த்தி சுரேஷ் பகிர்ந்திருக்கும் புகைப்படமானது இணையதளங்களில் வைரலாகி அவரின் ரசிகர்களின் மத்தியில் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
