Connect with us

அடுத்து ஹீரோவா களம் இறங்கும் கே.பி.ஒய் பாலா… முதல் கட்டமாக நவம்பர் 4 இல் சம்பவம்..!

kpy bala

Tamil Cinema News

அடுத்து ஹீரோவா களம் இறங்கும் கே.பி.ஒய் பாலா… முதல் கட்டமாக நவம்பர் 4 இல் சம்பவம்..!

Social Media Bar

மக்களுக்கு பல நன்மைகளை செய்து அதன் மூலமாகவே அதிக பிரபலம் அடைந்தவர் நடிகர் கே.பி.ஒய் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக பாலா மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றுத்தந்தது. இந்த நிலையில் அடுத்து பாலா திரைப்படங்களில் நடிக்கப் போகிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன.

நடிகர் ராகவா லாரன்ஸ் கூட அவருக்கு துணையாக இருப்பதாக கூறப்பட்டது ஆனாலும் அவர் எந்த படத்திலும் நடிப்பது குறித்து இன்னும் பெரிதாக தகவல்கள் வராமல் இருக்கிறது.

bala

bala

பாலாவின் ஆல்பம்:

இருந்தாலும் முதலில் மக்கள் மத்தியில் தன்னை நடிகராக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகு தான் அவர்கள் நடிக்கும் படங்களுக்கு வரவேற்புகள் கிடைக்கும்.

எனவே பாலா நிறைய ஆல்பம் பாடல்களில் தற்சமயம் பங்கேற்க துவங்கி இருக்கிறார். அப்படியாக ராக்காயி என்கிற ஒரு பாடலில் அவர் நடனமாடி இருக்கிறார். அதன் டீசர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அதில் நடனமாடி இருக்கும் பாலாவின் நடனங்கள் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் இதற்கு நேர் மறைவான விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கிறது. வரும் வருகிற நவம்பர் நான்காம் தேதி இந்த பாடல் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது

To Top