Connect with us

நான் கவர்ச்சி காட்டுனா நீ தாங்க மாட்ட!.. ஜெயலலிதாவை ஓரம் கட்டிய நடிகை..

jayalalitha

Cinema History

நான் கவர்ச்சி காட்டுனா நீ தாங்க மாட்ட!.. ஜெயலலிதாவை ஓரம் கட்டிய நடிகை..

Social Media Bar

சினிமாவில் ஒரு பெண் நடிகை ஆவதற்கு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது அவர்களது நிறம். பொதுவாகவே நிறத்தை வைத்தே பெண்களின் அழகு தீர்மானிக்கப்படுகிறது. வெள்ளை நிறத்தில் இருந்தால் அவர்கள் அழகானவர்கள் என்று தீர்மானிக்கிறார்கள்.

தமிழ் சினிமா ரசிகர்களும் அதிகபட்சம் வெள்ளையான கதாநாயகிகளையே விரும்புகின்றனர் ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் சினிமாவில் கருப்பு நிறத்தில் இருந்த பலரும் கதாநாயகியாக இருந்துள்ளனர். அவர்கள் சில வெள்ளை நிறத்தில் இருந்த கதாநாயகிகளுக்கே போட்டியாக இருந்துள்ளனர்.

தமிழில் வெண்ணிற ஆடை திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஜெயலலிதா. முதல் படத்திலேயே அதிக கவர்ச்சியுடன் நடித்தார் ஜெயலலிதா. இதனால் அப்பொழுது அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர் அதனை தொடர்ந்து ஜெயலலிதா அதிக வாய்ப்புகளை பெற்றார்.

ஆனால் அந்த அளவிற்கு கவர்ச்சிகள் எதுவும் இல்லாமலேயே கற்பகம் திரைப்படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார் நடிகை கே ஆர் விஜயா. கற்பகம் திரைப்படம் வந்த பிறகு கே ஆர் விஜயா மாதிரியான ஒரு மனைவிதான் எனக்கு வேண்டும் என்று அப்போதைய இளைஞர்கள் பேசும் அளவிற்கு கே ஆர் விஜயா பிரபலமானார்.

அப்பொழுது ஜெயலலிதாவின் மார்க்கெட்டை கே.ஆர் விஜயா பிடித்திருந்தார். பிறகு வந்த பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் முதல் முறையாக கவர்ச்சியாக நடித்தார். நீச்சல் உடையில் கே.ஆர் விஜயா அறிமுகமானதாலேயே அந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அந்த அளவிற்கு நிற வேற்றுமை இல்லாமல் நடிப்பை வைத்து போட்டி நடந்ததால் ஜெயலலிதாவும் கே.ஆர் விஜயாவும் போட்டி நடிகைகளாக இருந்திருக்கின்றனர்.

To Top