நக்மா படத்துல பச்சையா அதை பண்ணுனாங்க.. பாலகிருஷ்ணா குறித்து கூறிய இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்.!

தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த முக்கியமான இயக்குனர்களில் கே.எஸ் ரவிக்குமார் மிக முக்கியமானவர். தமிழில் அப்பொழுது பெரிய நடிகர்களாக இருந்த அனைவரையும் வைத்து படம் இயக்கியவர் கே.எஸ் ரவிக்குமார்.

இவர் ஒரு படம் இயக்குகிறார் என்றாலே அந்த திரைப்படம் பெரிய வெற்றியை அடைந்து விடும் என்கிற ஒரு நிலை இருந்தது. இதனால் கே.எஸ் ரவிக்குமாரின் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழியிலும் அதிக பிரபலம் அடைந்தது.

Social Media Bar

இந்த நிலையில் அவரது திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நக்மா மற்றும் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் பிஸ்தா. இந்த திரைப்படம் குறித்துதான் அவர் பேசியிருந்தார் இதில் அவர் கூறும் பொழுதில் பிஸ்தா திரைப்படம் வெளியான பொழுது தெலுங்கில் அந்த திரைப்படத்தை படமாக்கலாம் என்று யோசித்து வைத்திருந்தனர்.

தெலுங்கில் நடந்த சம்பவம்:

பிறகு பாலகிருஷ்ணாவிடம் இந்த கதையை நாங்கள் கூறினோம். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது சரி தெலுங்கில் இதை படமாக பண்ணலாம் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் தெலுங்கு துறையை சேர்ந்த இன்னொரு நபர் வந்து ஏற்கனவே இந்த திரைப்படம் தெலுங்கில் படமாக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.

நான்தான் அந்த படத்தின் இயக்குனர் என்னை கேட்காமல் யார் அந்தக் கதையை படமாக்க முடியும் என்று நான் கேட்டேன். பிறகுதான் தெரிந்தது என்னிடம் அனுமதியே வாங்காமல் ஏற்கனவே தெலுங்கில் அதை படமாக்கி இருந்தனர் என்று கூறியிருக்கிறார்.