Connect with us

ஏ.ஆர் ரகுமான் விழாவிற்கு போன என் பொண்ணுக்கு என்ன ஆச்சு தெரியுமா? உண்மையை பகிர்ந்த குஷ்பு!..

News

ஏ.ஆர் ரகுமான் விழாவிற்கு போன என் பொண்ணுக்கு என்ன ஆச்சு தெரியுமா? உண்மையை பகிர்ந்த குஷ்பு!..

Social Media Bar

தமிழில் உள்ள பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஏ.ஆர் ரகுமான். இவர் இசையமைக்கும் பாடல் எல்லாமே தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அதே போல ஏ.ஆர் ரகுமான் எல்லோருடனும் நல்ல விதத்தில் பழக கூடியவர்.

தமிழ் திரை துறையில் எந்த வித சர்ச்சையும் இல்லாத ஒரு இசையமைப்பாளராக இவர் இருந்து வந்தார். இடையில் பேட்டிகளில் பேசும்போது தமிழ் சினிமாவில் லைட் மேன் என்னும் வேலை செய்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்பதை கூறியிருந்தார்.

ஆனால் நேற்று முன்தினம் சென்னையில் ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி நடந்தது. இந்த கச்சேரிக்கு 20,000 பேர் டிக்கெட் வாங்கியிருந்தனர். ஆனால் 4000 பேருக்குதான் இடங்கள் இருந்தன. இதனால் ஆன பிரச்சனையில் பலரால் டிக்கெட் எடுத்தும் அந்த நிகழ்வை பார்க்க முடியவில்லை.

இதுக்குறித்து நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும்போது எனது மகள்களும் ஏ.ஆர் ரகுமான் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக டைமண்ட் டிக்கெட்டை எடுத்திருந்தனர். ஆனால் அவர்களாலும் உள்ளே செல்ல முடியவில்லை.

ஏ.ஆர் ரகுமான் நல்ல மனிதர். அவரது நிகழ்ச்சியில் இப்படியான பிரச்சனைகள் நடந்திருக்க கூடாது என குஷ்பு தனது பேட்டியில் கூறியிருந்தார்.

To Top