sivaji ganesan kutty padmini

சின்ன பிள்ளைனு கூட பார்க்காம ஓங்கி ஒண்ணு கொடுத்தாரு… சிவாஜி கணேசன் அந்த விஷயத்துல ரொம்ப டெரர்..

Cinema History Tamil Cinema News

தமிழ் திரை கலைஞர்களை பொருத்தவரை சிவாஜி கணேசனுடன் நடிப்பது என்பது ஒரு காலத்தில் அனைவருக்கும் பெரிய ஆசையாக இருந்தது. சினிமாவிற்கு ஒருவர் வந்துவிட்டார் என்றாலே ஒரு காட்சியாவது சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அதனால்தான் பார்த்திபன், பாக்யராஜ், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் அனைவருமே சிவாஜி கணேசனுடன் நடித்திருப்பதை பார்க்க முடியும் ஏனெனில் சிவாஜி கணேசனோடு நடிப்பது என்பது நடிப்பு என்பதையும் தாண்டி அவர்களுக்கு நடிப்பு குறித்து பல விஷயங்களை கற்றுக் கொள்ள உதவும் ஒரு விஷயமாக இருக்கும்.

மேலும் அவ்வளவு பெரிய நடிகர் என்றாலும் அந்த அளவிற்கு மோசமாக சிவாஜி நடந்து கொள்ளவே மாட்டார் அவர் எப்பொழுதும் எளிமையாகதான் இருப்பார் என்று பாக்கியராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த நிலையில் அவருடன் நடித்த அனுபவம் குறித்து குட்டி பத்மினி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

திருமால் பெருமை என்கிற திரைப்படத்தில் குட்டி பத்மினி சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடித்திருந்தார். அதில் ஒரு நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது குட்டி பத்மினி மட்டும் படப்பிடிப்பிற்கு வரவில்லை. அவர் வேறு ஒரு படத்திலும் கமிட்டாகி இருந்ததால் அந்த படத்திற்கு நடிக்க சென்று விட்டார்.

இதனால் கோபமான சிவாஜி கணேசன் என்ன செய்தாவது அவளை அழைத்து வாருங்கள் என்று கூறி ஆட்களை அனுப்பிவிட்டார். அவர்களும் சென்று அந்த படப்பிடிப்பு குழுவிடம் பேசி குட்டி பத்மினியை அழைத்து வந்தனர். அதற்காக குட்டி பத்மினியை திட்டிவிட்டு படப்பிடிப்பை துவங்கினார் சிவாஜி கணேசன்.

அந்த காட்சியில் குட்டி பத்மினியை சிவாஜி கன்னத்தில் அறைய வேண்டும் அப்போது நடிப்புக்காக அறையாமல் உண்மையாகவே அவரை அறைந்து விட்டார் சிவாஜி கணேசன். ஏனெனில் சிவாஜி கணேசன் எப்போதுமே நடிப்பில் கொஞ்சம் இறங்கி நடிப்பார்.

அதனால் அடிக்கும் காட்சிகளில் சில சமயங்களில் உண்மையாகவே அடித்து விடுவார். ஆனால் குட்டி பத்மினி சின்ன பெண் என்பதால் அவரால் அந்த அடியை தாங்கிக் கொள்ள முடியாது. இருந்தாலும் அந்த அடியை வாங்கிக்கொண்டும் வசனத்தை சரியாக பேசினார் குட்டி பத்மினி. இதனை கண்டு படக்குழுவே ஆச்சரியப்பட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் சிவாஜி கணேசனே அவருக்கு கைதட்டி ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தார் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் குட்டி பத்மினி