சிம்ரன் என்கிற பேருக்கு என்ன அர்த்தம்? – ரசிகர்களுக்கு விவரித்த சிம்ரன்

தமிழ் சினிமாவில் வெகுகாலம் ஒரு நடிகை திரைத்துறைக்குள் இருப்பது கடினமான காரியமாகும். அந்த வகையில் வெகுகாலம் திரைத்துறையில் மாஸ் காட்டிய கதாநாயகிகளில் முக்கியமானவர் சிம்ரன்.

சிம்ரனுக்கு ஒரு பெரிய ரசிக வட்டாரம் இருந்தது. வேற்று மொழியை சேர்ந்தவராக இருந்தாலும் இப்போது சரளமாக தமிழ் பேசும் அளவிற்கு தமிழை பழகிவிட்டார். இத்தனை ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்ததே அதற்கு காரணமாகும்.

பழைய பேட்டி ஒன்றில் ரசிகர்கள் சிம்ரனிடம் பேட்டி எடுத்தனர். அப்போது சிம்ரன் என்ற பெயருக்கு என்ன அர்த்தம்? என ஒரு ரசிகர் கேட்டார். அப்போது அதுக்குறித்து சிம்ரன் விளக்கும்போது சிம்ரன் என்ற பெயருக்கு தியானம் என அர்த்தமாகும்.

உண்மையில் சிம்ரன் என்ற பெயர் இந்தியாவில் மிகவும் பிரபலமான பெயராகும். ஆனால் தமிழ்நாட்டில் அந்த பெயர் வெகுவாக பிரபலமாக இல்லாத காரணத்தால் பலருக்கும் தெரியவில்லை என அவர் கூறியிருக்கிறார்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh