ajith vijay

அஜித் அந்த பாட்டை வச்சதே விஜய்யை குறி வச்சுதான்!.. இதெல்லாம் வேற நடந்துச்சா!..

Cinema History News Tamil Cinema News

தமிழ் சினிமாவில் போட்டி என்பது எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில் ஆரம்பித்த நடிகர்களுக்கு இடையேயான இந்த போட்டி என்பது தொடர்ந்து தற்சமயம் இளம் சமுதாயத்தினர் வரை பரவி இருக்கிறது.

ஆனால் அதில் இடையில் ரஜினி கமலுக்கு பிறகு பெரிதாக போட்டி போட்டுக் கொண்டவர்கள் விஜய்யும் அஜித்தும்தான், ரஜினி கமல் கூட அவ்வளவு நேரடியாக சண்டை போட்டுக் கொண்டது கிடையாது, ஆனால் விஜய்யும் அஜித்தும் மாறி மாறி அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள்.

முக்கியமாக அஜித் தரும் பேட்டிகளே பல சர்ச்சைகளை ஏற்படுத்தின என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த காலங்களில் அஜித் ஏதாவது ஒரு பேட்டி கொடுக்கிறார் என்றால் அந்த பேட்டியில் தேவையில்லாமல் பல விஷயங்களை பேசி விடுவாராம்.

முக்கியமாக விஜய் குறித்து கேட்டாலும் கூட பல சர்ச்சையான தகவல்களை கூறி விடுவார். இதேபோல ஒரு பேட்டியில் அடுத்த ரஜினி ஆக வேண்டும் என்பதுதான் என் ஆசை என்றும் கூறியிருக்கிறார். இப்படி எல்லாம் பேசுவதால் அஜித் கொடுக்கும் பேட்டிக்காக பத்திரிக்கையாளர்களே காத்திருக்க துவங்கினர்.

இதனால் கடுப்பான விஜயும் பதிலுக்கு அஜித்தை தாக்கி பேட்டி கொடுத்துள்ளார். இந்த சமயத்தில்தான் அஜித் அட்டகாசம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். எனவே இவர் விஜய்யை தாக்க வேண்டும் என்பதற்காகவே அட்டகாசம் திரைப்படத்தில் இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன என்று திரும்பத் திரும்ப உனக்கென்ன என்கிற வார்த்தையை அதிகமாக பயன்படுத்தியிருந்தார்

ஏனெனில் விஜய் அதற்கு முன்பு பேசிய பேட்டியில் அந்த உனக்கென்ன என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருந்தாராம் எனவே அவரை தாக்கும் விதமாகவே அந்த பாடலை அமைத்தார் அஜித் என்று பிஸ்மி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் அந்த அளவிற்கு இருவருக்குள்ளும் நிஜமாகவே போட்டி நடந்து இருக்கிறது.