Connect with us

கொடுத்த பட்ஜெட்டை தாண்டி விக்னேஷ் சிவன் செய்த வேலை.. இழுப்பறியில் இருக்கும் எல்.ஐ.கே..!

Tamil Cinema News

கொடுத்த பட்ஜெட்டை தாண்டி விக்னேஷ் சிவன் செய்த வேலை.. இழுப்பறியில் இருக்கும் எல்.ஐ.கே..!

Social Media Bar

நயன்தாராவின் கணவனான விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படங்களில் பெரும்பான்மையான திரைப்படங்கள் நடுத்தர வெற்றியைதான் அடைந்து வருகின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் நானும் ரவுடிதான் போடா போடி மாதிரியான ஒரு சில படங்கள் பேசப்படும் படங்களாக இருந்தாலும் கூட நிறைய திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்திருக்கின்றன.

அவரது இயக்கத்தில் வந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் கூட பெரிதாக வெற்றியை பெறவில்லை. விக்னேஷ் சிவனை பொறுத்தவரை காதல் கதைக்களங்கள்தான் பெரிதாக அவர் இயக்கும் படமாக இருக்கும்.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இவர் இயக்கி வரும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி இந்த திரைப்படத்தில் கௌரி கிஷான் மற்றும் கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கின்றனர்.

vignesh shivan

vignesh shivan

நடிகர் எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு கதைக்களம் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 18 இந்த திரைப்படம் திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் படத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. விக்னேஷ் சிவன் படத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை தாண்டி அதிகம் செலவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 60 கோடி ஆகும். இதற்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடித்த படங்களை விடவும் இந்த படத்தின் பட்ஜெட் தான் மிக அதிகம். இதற்கு முன்பாக நடித்த டிராகன் திரைப்படத்தின் பட்ஜெட் கூட 30 கோடி தான்.

அப்படி இருக்கும் பொழுது 60 கோடி செலவில் வெளியாகும் இந்த படம் அதிக வசூலை கொடுக்க வேண்டும் என்கிற பிரச்சனை இருக்கிறது. இதற்கு நடுவே அதையும் தாண்டி அதிக செலவு செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். எனவே இப்பொழுது படம் பாதியிலேயே இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 

 

To Top