அந்த படத்தோட க்ளைமேஸை மாத்துனா படம் வேஸ்ட்டு!.. சரியாக கணித்த லிவிங்ஸ்டன்… அதேதான் நடந்துச்சு!.

Actor Livingston சினிமாவில் சிலர் பெரும் அறிவுடையவர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருக்கும். திரையில் வரும் சில நபர்களை மட்டுமே பொதுமக்கள் கதாநாயகர்கள் என கொண்டாடுகிறார்கள்.

ஆனால் அவர்கள் கதாநாயகர்களாக மின்னுவதற்கு ஆயிரம் பேரின் உழைப்பு பின்னால் தேவைப்படுகிறது. அப்படி பல துறைகளிலும் பணிப்புரிந்தவர்தான் நடிகரும் இயக்குனருமான லிவிங்ஸ்டன். லிவிங்ஸ்டன் கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் அதற்கு முன்பு அவர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அதன் பிறகு திரைக்கதை எழுதி வந்தார். கமல் நடித்த காக்கி சட்டை படத்தின் கதையை எழுதியவர் லிவிங்ஸ்டன் தான்.

அதன் பிறகுதான் லிவிங்ஸ்டன் படங்களில் நடிக்க துவங்கினார். அவர் நடித்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் சொல்லாமலே. பிச்சைக்காரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சசி இயக்கிய திரைப்படம் சொல்லாமலே அதன் க்ளைமேக்ஸ் காட்சியில் லிவிங்ஸ்டன் நாக்கை அறுத்துக்கொள்வதாக காட்சி இருக்கும்.

Social Media Bar

ஆனால் தயாரிப்பாளர் அந்த காட்சி வேண்டாம் என்று கூறினார். ஆனால் இயக்குனருக்கு அந்த காட்சியை வைக்க வேண்டும் என்றே ஆசை. இந்த நிலையில் விஷயம் லிவிங்ஸ்டனிடம் வந்தது. உடனே தயாரிப்பாளரிடம் பேசிய லிவிங்ஸ்டன். அந்த காட்சிதான் சார் அந்த படத்துக்கே அழகு, அது இல்லைனா படம் வேஸ்ட்டு. என கூறினார்.

அதே போல அந்த படம் வெளியானப்பிறகு அந்த காட்சி மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே அமைந்தது.