Tamil Cinema News
விஜய் பட தயாரிப்பு நிறுவனத்திடம் சென்ற ரோலக்ஸ்.. திரும்ப திரும்ப இதுவே நடக்குதே..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் தனி மார்க்கெட் ஒன்று இருந்து வருகிறது.
இப்பொழுது லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் என்றாலே அந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் போட்டி போடும் நிலை உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கைதி 2 மற்றும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரோலக்ஸ் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்த திரைப்படத்தை ஏற்கனவே விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை தயாரிக்கும் கே.வி.என் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இது ஒரு தெலுங்கு நிறுவனம் ஆகும்.
சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தையும் தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கிறார்கள் என்று இது குறித்து தமிழ்நாட்டு தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
