கூலி படத்துக்காக லோகேஷ் போட்ட கண்டிஷன்.. நெருக்கடியில் இருக்கும் சன் பிக்சர்ஸ்.!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் கூலி. மற்ற திரைப்படங்களை விடவும் கூலி திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வருகின்றன.

ஏனெனில் லோகேஷ் கனகராஜ் பொதுவாகவே பயங்கர மாஸான திரைப்படங்களாக இயக்கக் கூடியவர். அப்படி இருக்கும் பொழுது அவரும் ரஜினியும் சேர்ந்து ஒரு படம் என்றால் அது எந்த அளவிற்கு இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

அஜித் விஜய் மாதிரி நடிகர்களின் திரைப்படங்களின் அப்டேட்டுகள் வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பல மாதங்கள் ஆன பிறகும் கூட இன்னமும் படம் குறித்த பெரிதான அப்டேட் என்று எதுவும் வரவில்லை.

Rajinikanth-coolie
Rajinikanth-coolie
Social Media Bar

படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அப்டேட் மட்டுமே வந்துள்ளன. இந்த நிலையில் இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை நிதானமாக படமாக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் லியோ திரைப்படத்தை இயக்கும் பொழுது படத்தை இயக்க துவங்கும் பொழுதே அதற்கான வெளியீட்டு தேதியை அறிவித்து விட்டனர். அதனால் வேகமாக படத்தை இயக்க வேண்டிய சூழ்நிலை லோகேஷ் கனகராஜுக்கு இருந்தது.

எனவே அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அப்படியான எந்த தவறும் கூலி திரைப்படத்தில் நடந்து விடக்கூடாது என்று தயாரிப்பு நிறுவனத்திடம் அதிக கால அவகாசம் வாங்கிக்கொண்டு படத்தை இயக்கி வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வருவதால் நெருக்கடியான சூழலில் இருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.