Connect with us

விஜய் மகன் இயக்கும் படம் எப்போ வரும்!.. வெளிப்படையாக கூறிய லைக்கா நிறுவனம்!.

Jason sanjay

Cinema History

விஜய் மகன் இயக்கும் படம் எப்போ வரும்!.. வெளிப்படையாக கூறிய லைக்கா நிறுவனம்!.

Social Media Bar

Vijay Son Jason Sanjay : பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவிற்கு வாய்ப்புகளைப் பெற்று வருவது என்பது காலம் காலமாக அனைத்து சினிமாவிலும் நடந்து வரும் ஒரு விஷயம்தான். அந்த வகையில் நடிகர் விஜய் அவரின் மகனை தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகப்படுத்த இருக்கிறார்.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிறுவயதாக இருந்த பொழுதே வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடலில் வந்திருப்பார். அப்போதே அவர் திரைத்துறைக்கு வரப்போகிறாரா என்று கேள்விகள் மக்கள் மத்தியில் இருந்திருந்தன.

அதற்கு அப்போது விடை அளித்த விஜய் கூறும் பொழுது இப்பொழுது என் மகனுக்கு படிப்பு மட்டும்தான் முக்கியம். ஏதோ ஒரு படத்தில் வந்து டான்ஸ் ஆட வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான் அதனால் இந்த திரைப்படத்தில் அவனை நடனம் ஆட வைத்தேன். தொடர்ந்து அவன் சினிமாவில் நடிக்க மாட்டான்.

வருங்காலத்தில் அவன் என்ன முடிவு செய்கிறானோ அதன் படி அவன் செய்வான் என்று கூறிவிட்டார். இந்நிலையில் வெளிநாட்டிற்கு சென்று கல்லூரி படிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் தற்சமயம் இயக்குனர் ஆவது என்று முடிவு செய்து இருக்கிறார். நடிப்பில் தான் அதிக வருமானம் வரும் என்றாலும் கூட தனது மகனுக்கு இயக்குனர் ஆவதில்தான் விருப்பம் இருக்கிறது என்பதை அறிந்ததும் விஜய் அதற்கு எந்த தடங்கலும் கூறவில்லை.

மேலும் லைக்கா நிறுவனத்திடம் இதற்காக வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் திரைக்கதை வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன .இந்த படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் லைக்கா நிறுவனம் இந்த வருடம் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் பொழுது அதில் ஜேசன் சஞ்சய் திரைப்படமும் இருக்கிறது. ஆனால் அந்த திரைப்படத்தில் நடிப்பவர் யார் என எந்த ஒரு தகவலும் கூறப்படாமல் ரகசியமாகவே இருக்கிறது ஆனால் இந்த வருட இறுதிக்குள் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top