நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் வரும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது.
அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன் என்றுதான் கூற வேண்டும். அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பெரிய இயக்குனர்கள் படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் சிவகார்த்திகேயன்.
அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் மதராஸி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரைலரை பார்க்கும்போது நானி நடித்த சூர்யா சாட்டர்டே திரைப்படத்தின் சில விஷயங்கள் இருப்பது தெரிவதாக கூறப்படுகிறது.
சூர்யா சாட்டர்டே திரைப்படத்தில் யார் என்ன வம்பு செய்தாலும் ஹீரோ அவர்களை சனிக்கிழமை மட்டுமே அடிப்பார் என்கிற மாதிரியாக திரைப்படத்தின் கதை அம்சம் இருக்கும். அதே போல இதிலும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு விதிமுறை இருக்கலாம் என கூறப்படுகிறது.
எப்படி இருந்தாலும் இப்போது இந்த ட்ரைலர் வரவேற்பை பெற்று வருகிறது.