News
எதிர்நீச்சல் பாகம் 2 வருதா ? ரசிகருக்கு ஜனனி கொடுத்த பதில்…
கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் விஷயமாக எதிர்நீச்சல் சீரியல்தான் இருந்து வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியலை மிகவும் வேகமாக முடித்து அதற்கு எண்டு கார்டு போட்டு விட்டனர்.
எதிர்நீச்சல் சீரியலை பொருத்தவரை அதற்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வந்தனர். ஆரம்பத்திலிருந்து அந்த சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று இப்பொழுது ஒரு பெரிய ஆடியன்ஸை கைவசம் வைத்திருந்தது.
சீரியலில் மாற்றம்:
ஆரம்பத்தில் இந்த தொடர் துவங்கிய பொழுது பலரும் இந்த தொடரை பார்க்கவில்லை. ஆனால் போக போக இதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது இந்த நிலையில் மாரிமுத்துவின் இறப்புக்கு பிறகு இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் வேலராமமூர்த்தி நடித்தார்.

அதற்கு பிறகு அந்த சீரியலில் நிறைய மாற்றங்கள் இருந்தது. இருந்தாலும் கூட நாடகத்தை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதில் இயக்குனர் திருச்செல்வத்திற்கு ஒரு ஐடியா இருந்தது.
எண்டு கார்டு:
இருந்தாலும் கூட சன் டிவியுடன் கருத்து வேறுபாட்டின் காரணமாக தான் நாடகம் சீக்கிரம் முடிந்து விட்டதாக பேச்சுக்கள் இருந்து வருகிறது. இதற்கு நடுவே எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் வரவிருக்கிறது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இதற்காக வேறு டிவி சேனல்களிடம் இயக்குனர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜனனியாக அதில் நடித்த நடிகை மதுமிதாவிடம் ரசிகர் ஒருவர் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் வருமா என்று கேட்டு இருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த மதுமிதா இப்போது வரை அப்படி எந்த ஒரு தகவலும் எங்களுக்கு வரவில்லை என்று பதில் அளித்து இருக்கிறார்
