Latest News
ரத்தத்தை உறிஞ்சி எலும்பு கூடாக்கும் அபாயம்.. மனித குலத்திற்கே ஆபத்து.. மதுரையில் ஓப்பனாகும் அடுத்த ப்ரோஜக்ட்.!
தொடர்ந்து தொழிற்சாலைகளால் பாதிக்கப்படும் ஒரு சில நாடுகளில் மிக முக்கியமான ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. உலகிலேயே பெரிய தொழிற்சாலை விபத்து நடந்த ஒரு நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது.
போபாலில் நடந்த விபத்தானது மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தாக உலக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விபத்துக்கு பிறகு தொடர்ந்து இந்தியாவில் புதுவித தொழிற்சாலைகள் துவங்குவதற்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்சமயம் மதுரையில் நடந்து வரும் சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாக இருக்கிறது. மதுரையில் உள்ள மேலூரை சுற்றியுள்ள பல கிராமங்கள் இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களாக இருக்கின்றன.
இயற்கை எழில் பொங்கும் கிராமம்:
அங்கு ஆறுகளுக்கும் நீர் நிலைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கின்றன மேலும் விவசாயம் அதிகமாக இருக்கும் ஊர்களாக அவை இருக்கின்றன இந்த நிலையில் மதுரையில் உள்ள நாயக்கர் பட்டி என்னும் கிராமம் ஒரு பல்லுயிர் பாதுகாப்பு தளமாக அறிவிக்கப்பட்ட கிராமமாகும்.
இந்த கிராமத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் இழை கனிம வளங்களை எடுப்பதற்கான சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
வேதாந்தா என்கிற நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் சிங் என்கிற நிறுவனம்தான் இதில் கனிம வளங்களை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறி 10 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கின்றனர்.
டங்ஸ்டன் சுரங்கம்:
ஏனெனில் இந்த கனிம சுரங்கம் அமையும் நிலையில் அது இயற்கைக்கு பெரிய பிரச்சினையாக அமையும். ஏனெனில் 5000 அடி தோண்டினால் தான் இந்த கனிம வளத்தை எடுக்க முடியும். இப்படி செய்வதன் மூலமாக சுற்றுவட்டார கிராமங்களில் நீர் தட்டுப்பாட்டில் துவங்கி பலவித பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்கின்றனர் மக்கள் இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறும் பொழுது கண்டிப்பாக இயற்கையில் பெரிய பிரச்சனையை இந்த கனிம சுரங்கம் ஏற்படுத்தும்.
உடலில் இருந்து எலும்புகளை உறிஞ்சுவது போல இது இயற்கை வளங்களை உறிஞ்சி விடும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் எங்களுக்கு எந்த அரசாங்க சலுகைகளும் வேண்டாம். அரசாங்கம் தந்த ஆதார் கார்டு போன்ற பலவற்றையும் நிராகரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று போராட்டத்தில் இறங்கி இருக்கின்றனர் இந்த மக்கள்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்