Connect with us

ஊ சொல்றியா மாமாவுக்கு டஃப் கொடுத்துச்சா?.. எப்படி இருக்கு புஷ்பா 2 Kissik பாடல்.!

kissik song

Tamil Cinema News

ஊ சொல்றியா மாமாவுக்கு டஃப் கொடுத்துச்சா?.. எப்படி இருக்கு புஷ்பா 2 Kissik பாடல்.!

Social Media Bar

இப்பொழுது எல்லாம் திரைப்படங்களில் ஐட்டம் பாடல்கள் முக்கியமானதாக மாறி இருக்கின்றன. படங்களை அதிகமாக பிரபலப்படுத்துவதற்கு இந்த பாடல்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

உதாரணத்திற்கு புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் வெளியான ஊ சொல்றியா மாமா என்கிற பாடல் அந்த படத்தை அதிகமாக பிரபலமாக்கியது. அதேபோல வாரியர் என்கிற திரைப்படத்தில் வெளிவந்த புல்லட் என்கிற பாடலும் மிகப் பிரபலம் அடைந்தது.

ஜெயிலர் திரைப்படத்திலும் காவாலா என்கிற ஒரு பாடல் அந்த படத்தை அதிக பிரபலமாகியது. இந்த நிலையில் இந்த மாதிரியான ஐட்டம் பாடல்களுக்கு இப்பொழுது முக்கியத்துவம் அதிகரித்து இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தில் முதல் பாகத்தில் சமந்தா ஆடிய அந்த நடனத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

புஷ்பா 2 பாடல்:

அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அதே மாதிரி பாடல் வைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர் படகுழுவினர். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருப்பவர் நடிகை ஸ்ரீ லீலா.

pushpa 2 kissik

pushpa 2 kissik

ஸ்ரீ லீலா பெரும்பாலும் அவரது நடனத்திற்கு மிகப் பிரபலமானவர். வளைந்து நெளிந்து கதாநாயகர்களை விட சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர் என்பதாலேயே அவரது பாடல்கள் அதிக பிரபலம் அடைந்து விடுகின்றன. மேலும் அவர் நடனமாடும் பாடலில் எவ்வளவு கடினமான நடனத்தையும் வைக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது.

இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தில் கிசக் என்கிற ஒரு பாடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் ஸ்ரீ லீலா நடனமாடி இருக்கிறார் தற்சமயம் இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இருக்கிறது அதனை பார்த்து வரும் தமிழ் சினிமா ரசிகர்கள் என்ன இருந்தாலும் ஊ சொல்றியா மாமா பாடல் அளவிற்கு இதன் பாடல் வரிகள் இல்லை என்று கூறுகின்றனர்.

முழு வீடியோ பாடல் வரும் பொழுது தான் நடனம் எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறது என்பது தெரியும் ஆனால் பெரும்பாலும் சமந்தாவை விட ஸ்ரீ லீலா நன்றாக நடனமாட கூடியவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஆனால் பாடல் எந்த அளவிற்கு பிரபலம் அடையும் என தெரியவில்லை.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top