Movie Reviews
பெண்களுடன் சாமியார் செய்த லீலை !.. எதிர்த்த பத்திரிக்கையாளர்!. உண்மை கதை மகாராஜ் – பட விமர்சனம்!..
நிஜமாகவே நடந்த வழக்கு ஒன்றை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான் மகாராஜ். 1862 இல் கர்சன் தாஸ் என்னும் பத்திரிக்கையாளர் ஒரு வைணவ சாமியாருக்கு எதிராக குஜராத்தில் எழுப்பிய வழக்குதான் இந்த படத்தின் கதை.
படத்தின் நாயகனான கர்சன் தாஸ் சமூக விழிப்புணர்வு கொண்டவராக இருக்கிறார். வைணவ சமூகத்தில் பிறந்திருந்தாலும் கூட அப்போதே மூட நம்பிக்கைகளை எதிர்ப்பவராக இருந்துள்ளார். விதவைகள் மறுமணம், இந்து மத மூட நம்பிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து எழுதி வருகிறார் கர்சன்தாஸ்.
கடுப்பான கர்சன் தாஸ்:
இந்த நிலையில் குஜராத்தில் இருக்கும் வைணவ சாமியார் ஒருவர் அங்குள்ள பெண்களிடம் தொடர்ந்து பாலியல் உறவு கொண்டு வருகிறார். இதற்கு பாத பூஜை என்று பெயரும் வைத்துள்ளார். அவரிடம் தன் வீட்டு பெண்ணை அனுப்புவதை புண்ணியமாக கருதுகின்றனர் மக்கள்.

மேலும் அந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர். இந்த அவலத்தை பார்த்த கர்சன் தாஸ் கொதித்து எழுதுகிறார். தொடர்ந்து இந்த சாமியார் செய்யும் வேலைகளை தன்னுடைய பத்திரிக்கைகளில் எழுத துவங்குகிறார்.
வழக்கு:
இதனை தொடர்ந்து கர்சன் தாஸ் மீது மான நஸ்ட ஈடு வழக்கு போகிறார் அந்த சாமியார். அந்த வழக்கில் கர்சன் தாஸ் எப்படி உண்மையை நிலைநாட்டுகிறார் என்பதுதான் கதையே. இதில் கர்சன் தாஸ் கதாபாத்திரத்தில் அமீர் கான் மகனான ஜுனாய்த் கான் நடித்திருக்கிறார்.

1862 இல் இந்தியாவில் நடந்த இந்த வழக்கு அதன் பிறகு 2013 இல் நாவலாக வெளிவந்தது. அதை அடிப்படையாக கொண்டுதான் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் டப்பிங்கில் ஓ.டி.டியில் வெளியாகியிருக்கும் இந்த படத்திற்கு அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன.
