தஞ்சாவூர் பெரியகோவிலில் நடக்கும் பொன்னியின் செல்வன் பங்க்‌ஷன்-  யார் யாரெல்லாம் வர்ராங்க தெரியுமா?

அடுத்ததாக வரவிருக்கும் திரைப்படங்களில் மாபெரும் எதிர்ப்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கும் திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்கிற ராஜ ராஜ சோழன் பற்றிய கற்பனை கதையை படமாக எடுக்கிறார் இயக்குனர் மணி ரத்னம்.

மொத்தம் இரண்டு பாகங்களாக இந்த படம் வரவிருக்கிறது. முதல் பாகம் ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் பாகத்திற்கான பட வேலைகள் போய்க்கொண்டுள்ளன.

இந்நிலையில் படத்தின் முதல் பாகமானது வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதை ஒரு நிகழ்ச்சியாக செய்வது படத்திற்கு புரோமோஷனை ஏற்படுத்தும் என படக்குழு முடிவு செய்துள்ளது. எனவே தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலில் அதற்கான நிகழ்வுகள் நடக்க போவதாக கூறப்பட்டுள்ளது.

படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள விக்ரம் ,ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதா பச்சன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்னும் பலரும் இந்த நிகழ்வுக்கு வர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே ஜூலை முதல் வாரத்தில் தஞ்சாவூர் நகரம் கோலகலமாக இருக்க போகிறது என மக்கள் பேசி வருகின்றனர்.

Refresh