இன்னும் நிறைய பரிசு கொடுத்திருக்கேன். ஆனா யாருக்கும் தெரியாது ! – மனம் திறந்த கமல்..!

வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி சிறப்பாக செய்திருந்தார் என மக்கள் கூறுகின்றனர். படம் சிறப்பான வெற்றியை கொடுத்ததற்காக படத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார் கமல்ஹாசன்.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். படத்தில் பணிப்புரிந்த 13 உதவி இயக்குனர்களுக்கும் பைக் வாங்கி தந்துள்ளார். மேலும் நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் வாங்கி தந்துள்ளார். 

இதையடுத்து பேட்டியில் கமல் பேசியப்போது, கமல் இயக்கத்தில் எவ்வளவோ திரைப்படம் வந்திருந்த போதிலும் இந்த அளவில் யாருக்கும் பரிசளிக்க வில்லையே அப்படி ஒரு ஸ்பெஷலான படமாக விக்ரம் அமைந்துவிட்டதா? என கேட்டனர்.

அதற்கு கமல் “ நான் ஏற்கனவே பல படங்களுக்கு இதே போல பரிசளித்துள்ளேன். ஆனால் அது எதுவும் வெளியில் தெரியாது. அப்போது தகவல் தொழில்நுட்பம் அவ்வளவு வளர்ச்சி அடையாததால் அந்த அளவுக்கு யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது ஒரு ஊசியை நகர்த்தினால் கூட மீடியாவிற்கு தெரிந்துவிடும் அளவிற்கு மீடியா வளர்ந்துள்ளது” என கூறினார்.

Refresh