ஒரே நாளில் 100 ஷோ விக்ரம் – மாஸ் காட்டிய சென்னை திரையரங்கம்

வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி சிறப்பாக செய்திருந்தார் என மக்கள் கூறுகின்றனர்.

அதே போல போலீஸாக வரும் பகத் ஃபாசிலும் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கமலுக்கு மிகப்பெரிய ரீ எண்ட்ரி படமாக விக்ரம் அமைந்துவிட்டது. நான்கே நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது விக்ரம்.

சென்னையில் மாயாஜால் என்கிற மால் உள்ளது. இந்த மாலில் மொத்தம் 16 திரையரங்குகள் உள்ளன. இந்த பதினாறு திரையரங்குகளிலும் 3 நாட்களுக்கு விக்ரம் திரைப்படம் திரையிடப்பட்டது. ஒரு நாளைக்கு 100 ஷோக்கள் விக்ரம் ஓடியதாம். இதனால் மூன்று நாட்களில் மட்டும் 83 லட்சம் வசூல் செய்துள்ளது இந்த திரையரங்கு.

தமிழ் சினிமாவில் 100 ஷோ படத்தை ஓட்டி வசூல் சாதனை படைத்தது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

Refresh