அதெல்லாம் எனக்கு கஷ்டம்… லோகேஷால்தான் அதெல்லாம் பண்ண முடியும்.. மணி சார் ஓப்பன் டாக்..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக இயக்குனராக வரவேற்பை பெற்றவராக இருப்பவர் இயக்குனர் மணிரத்தினம்.

இயக்குனர்களை பொறுத்தவரை வெகு காலங்களுக்கு மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வது அவர்களுக்கு கடினமான விஷயமாக தான் இருந்து வருகிறது.

ஆனால் மணிரத்தினத்தை பொறுத்தவரை தொடர்ந்து அப்போதைய காலகட்டங்களில் மாற்றத்திற்கு ஏற்ற மாதிரி திரைப்படங்களையும் மாற்றி எடுப்பதால் அவருக்கு வரவேற்பு குறைவதே கிடையாது.

Social Media Bar

இப்பொழுது அவர் இயக்கத்தில் வந்த தக் லைஃப்  திரைப்படத்திற்கு கூட கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்திற்கு ஒரு வரவேற்பு கிடைக்கதான் செய்தது.

இந்த நிலையில் தான் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படம் குறித்து மணிரத்தினம் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது ஆயுத எழுத்து திரைப்படத்தில் வரும் சூர்யா மாதவன் மற்றும் சித்தார்த் மூவரின் கதாபாத்திரங்களை வைத்து தனித்தனி கதை பண்ணலாம்.

மூன்று பேரின் கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக ஒரு படம் எடுத்துவிட்டு பிறகு ஆயுத எழுத்து திரைப்படத்தை எடுத்திருக்கலாம் என்று கூறிய மணிரத்தினம் மேலும் கூறும் பொழுது ஆனால் அது மிக கடினமான ஒரு வேலை.

அதிக நேரம் எடுக்கும் வேலை அதை எல்லாம் லோகேஷ் கனகராஜ் மாதிரியான இயக்குனர்களால் தான் செய்ய முடியும் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.