1 கோடி பிரச்சனையில் வெளியாகாமல் இருந்த விஜய் படம்!.. ஃபைனான்சியரை ஆட விட்ட தயாரிப்பாளர்!..

அதிக சம்பளம் வாங்கும் கோலிவுட் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். பெரும்பாலும் விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு என்று கூறலாம். இதனாலேயே விஜய்யின் சம்பளமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில் விஜய் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படம் கில்லி. அந்த படம் திரும்பவும் 20 வருடங்கள் கழித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 2004 இல் கில்லி திரைப்படம் வெளியானப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்டுள்ளார் இயக்குனர் மாணிக்கம் நாராயணன்.

ஏ.எம் ரத்தினம் கில்லி திரைப்படத்தை வெளியிட இருந்தப்போது அதை வாங்கிய விநியோகஸ்தர்களில் மாணிக்கம் நாராயணனும் ஒருவராக இருந்தார். அந்த சமயத்தில் கில்லி படம் வெளியாவது தொடர்பாக ஏதோ பிரச்சனை சென்று கொண்டிருந்தது.

ghilli
ghilli
Social Media Bar

இந்த விஷயத்தை அறிந்த மாணிக்கம் நாராயணன் என்ன பிரச்சனை என ஏ.எம் ரத்தினமிடம் கேட்கும் பொழுது ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் ஃபைனான்ஸியருக்கு கொடுக்க வேண்டி உள்ளது என கூறியுள்ளார். உடனே ஃபைனான்ஸியரிடம் பேசிய மாணிக்கம் நாராயணன் 75 லட்சத்தை கொடுத்துள்ளார்.

ஆனாலும் மறுநாள் காலை மீண்டும் பாதி திரையரங்குகளுக்குதான் பெட்டியை தருவோம். மீதி திரையரங்குகளுக்கு மீதி பணம் கொடுத்த பிறகுதான் பெட்டியை தருவோம் என அவர்கள் கூறவும் கடுப்பான மாணிக்கம் நாராயணன் நீ படமே வெளியிட வேண்டாம் என்கிட்ட வாங்குன 75 லட்சத்தை கொடு என கூறியுள்ளார்.

வந்த பணமும் போய்விடுமே என கில்லியை அனைத்து திரையரங்குகளில் வெளியிட அனுமதித்துள்ளனர் பைனான்சியர்கள். இதை தனது பேட்டியில் மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார்.