கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக தனது வாழ்க்கையை துவங்கியார் நடிகர் மணிக்கண்டன். அதற்கு பிறகு படிப்படியாக உயர்ந்து தற்சமயம் கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் மணிகண்டன். மணிகண்டனின் நடிப்புக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.
ஏற்கனவே அவர் நடித்த குட் நைட் திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த லவ்வர் திரைப்படமும் ஓரளவு வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் மீது மணிகண்டனுக்கு அதிக மரியாதை உண்டு. ரஜினிகாந்தை நேரில் சந்தித்தப்போது நடந்த அனுபவத்தை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் மணிகண்டன் கூறும்போது ரஜினி சாரை நாங்கள் ஒரு குழுவாக பார்க்க சென்றோம்.
அப்போது அவர் என் படத்தில் எந்த படம் பிடிக்கும் என கேட்டார். பெரும்பாலும் அனைவரும் பாட்ஷா என்று கூறினர். ஆனால் நான் மட்டும் அண்ணாமலை என கூறினேன். ஏன் அண்ணாமலையை கூறுகிறீர்கள் பாட்ஷா நல்ல படம் இல்லையா என ரஜினி சார் கேட்டார்.
உடனே நான் கூறினேன் பாட்ஷா நல்ல படம்தான் சார். ஆனால் பாட்ஷாவில் வில்லனை எப்படியும் கொன்றுவிடுவீர்கள். ஆனால் அண்ணாமலையில் நண்பன்தான் வில்லன். நண்பனை என்ன செய்ய முடியும். அவ்வளவு பெரிய ஆளாக ஆன பிறகு அண்ணாமலை ச்சீ என்ன இப்படி ஆகிட்டோம் என தன் தாயிடம் அனைத்தையும் கொடுத்து அசோக்கிடமே கொடுக்க சொல்லும் இடத்தில் அவன் பெரிய மனிதன் ஆகின்றான் சார் என கூறியுள்ளார் மணிகண்டன்.
அதனை கேட்ட ரஜினிகாந்த் ஆமால்ல. அண்ணாமலை ஒரு சிறப்பான படம் என அவராகவே கூறிக்கொண்டார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்துக்கொண்டார் மணிகண்டன்.