News
கடைசியில் இப்படி பண்ணிட்டீங்களே மணி சார்- பொன்னியின் செல்வனில் நடந்த தவறு.
தமிழின் பெரும் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் சென்றவாரம் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளுக்கே செல்லாத பலரும் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்தை காண்பதற்காக திரையரங்குகளுக்கு செல்வதை பார்க்க முடிகிறது.
இந்த திரைப்படமானது அமரர் கல்கி எழுதிய நாவலாகும். அதையே தற்சமயம் திரைப்படமாக எடுத்துள்ளனர். தமிழின் மிகப்பெரும் இயக்குனரான மணிரத்னம் அவர்கள் இந்த படத்தை இயக்கியுள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் முழு கதையுமே எழுத்தாளர் கல்கியுடையது என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அந்த கதையில் படத்திற்கு தகுந்தாற் போல இயக்குனர் மணிரத்னம் சில காட்சிகளை மாற்றியமைத்து இருந்தார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் முடிந்த பிறகு இறுதியில் பெயர்கள் வரும்போது அதில் மூலக்கதை என போட்டு கல்கியின் பொன்னியின் செல்வன் என போடப்பட்டுள்ளது.
ஆனால் இப்படி போடுவது சரி கிடையாது என சினி வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏனெனில் ஒரு நாவலின் கருவை மட்டும் எடுத்துகொண்டு மொத்த கதையையும் இயக்குனர் மாற்றி அமைத்து படத்தை எடுத்தால்தான் மூலக்கதை என குறிப்பிட வேண்டும். மொத்தமாக கல்கியின் கதையையே திரைப்படமாக எடுக்கும்போது பொன்னியின் செல்வன் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்றே குறிப்பிட வேண்டும்.
இந்நிலையில் தற்சமயம் திரை வட்டாரத்தில் ஏன் மணிரத்னம் இவ்வாறாக குறிப்பிட்டார் என்பது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.
