News
வருஷத்துக்கு ஒன்னு இல்லன்னா ரெண்டு தடவைதான் பண்ணுவார்!.. அவ்வளவு அடக்கம்!. கௌதம் கார்த்திக் குறித்து பேசிய மஞ்சுமா மோகன்!.
Manjuma: நமக்கு மிகவும் பிடித்த நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் நமக்கு மிகவும் பிடிக்கும். படத்தில் ஹீரோ ஹீரோயினாக நடித்து பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் பிரபலங்களை நாம் பார்த்து வருகிறோம்.
அதில் ஒரு சில ஜோடிகள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாகவும் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலர் ஒருவரை ஒருவரை புரிந்து கொண்டு அன்பாகவும், ஒன்றாக தங்களுடைய குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஜோடி அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருந்தது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் மஞ்சிமா மோகன் நடிகர் கௌதம் கார்த்திக்கை பற்றி கூறியுள்ள ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன்
மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் கடந்த 2022 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். தமிழில் தேவராட்டம் என்ற படத்தில் மூலம் ஒன்றாக நடித்த இவர்கள் அந்த படத்தில் இருந்து காதலித்து வந்தார்கள்.

இரு வீட்டார் சம்மதத்துடனும் இவர்கள் திருமணம் செய்து கொண்டு தற்போது வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த இரு ஜோடிகளுக்கும் திரையுலகில் இருப்பவர்களும். ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.
கௌதம் கார்த்திக் குறித்து மஞ்சிமா மோகன் கூறியது
கௌதம் கார்த்திக் என்னிடம் எப்பொழுதும் சண்டை போட மாட்டார். கோபம் அவருக்கு அதிகமாகவே வரும். ஆனால் அடிக்கடி அவருக்கு கோபம் வராது.
வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ தான் அவர் கோபப்பட்டு நான் பார்த்திருக்கிறேன். என்னை போல அவர் கிடையாது.

நான் அவரிடம் பேசுவதற்கு அறைக்கு சென்றால், அவர் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அப்பொழுது நான் உங்களிடம் பேச வேண்டும் என கேட்பேன். பேசு எனக் கூறுவார். நான் இப்பொழுது நாம் பேசினால் நீங்கள் படித்துக் கொண்டிருப்பது நின்று விடும் என நான் கூறுவேன். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ன பேசவேண்டும் என என்னிடம் கேட்பார்.
ஆனால் கௌதம் கார்த்திக் முன்பு அப்படி இல்லை. இப்பொழுது தான் மாறி உள்ளார் என மஞ்சிமா மோகன் தன்னுடைய கணவர் கௌதம் கார்த்திக்கை பற்றி பேசியுள்ளார்.
