News
விவாகரத்து.. நட்பில் கள்ள உறவு.. யாரும் அறியாத மஞ்சு வாரியரின் மறுபக்கம்..!
தற்சமயம் தமிழ் மற்றும் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் அதிக பிரபலமான ஒரு நடிகையாக மஞ்சு வாரியர் இருந்து வருகிறார். மஞ்சுவாரியர் சிறு வயது முதலே மலையாளத்தில் நடித்துவரும் முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார்.
ஆனால் இப்பொழுதுதான் இவர் தமிழ் சினிமாவில் அதிகமாக அறியப்படும் ஒரு நடிகையாக இவர் இருக்கிறார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக அசுரன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார் மஞ்சுவாரியர்.
அதன் மூலமாக அவருக்கு வரவேற்பு கிடைத்தது. அசுரன் திரைப்படத்தில் கூட வயதான கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார். ஆனால் துணிவு திரைப்படத்தில் நடித்த பொழுது மஞ்சுவாரியருக்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் தற்சமயம் ரஜினி கதாநாயகனாக நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். மஞ்சுவாரியரின் கடந்த கால வாழ்க்கை என்று பார்க்கும் பொழுது அது மிகவும் மோசமானதாக இருந்திருக்கிறது.
சோதனையான வாழ்க்கை:
ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வமே இல்லாமல் இருந்திருக்கிறார் மஞ்சு வாரியர். ஆனால் அவரது அம்மா தொடர்ந்து வற்புறுத்தி அவரை சினிமாவில் நடிக்க வைத்திருக்கிறார். இந்த நிலையில் சினிமாவில் பிரபல மலையாள நடிகர் ஆன திலீப் மீது இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரது கணவர் திலீப் மஞ்சுவாரியரின் நெருங்கிய தோழியான காவியா மாதவனுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் அறிந்த பிறகு அவரை விவாகரத்து செய்த மஞ்சு வாரியர் வாழ்க்கை மீது பிடிப்பு இல்லாமல் போய்விட்டார். அதனை தொடர்ந்து சினிமாவில் இருந்தும் விலகிவிட்டார். கிட்டத்தட்ட 12 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த மஞ்சுவாரியர் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்து இப்பொழுது பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறார்.
கிட்டத்தட்ட 44 வயதை தாண்டும் மஞ்சு வாரியர் இப்பொழுதும் விடாமுயற்சியுடன் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
