Tamil Trailer
தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக… புது ரக பேய் படம்.. மர் மர் ட்ரைலர்..!
தமிழ் சினிமாவில் வரும் பேய் படங்களிலிருந்து வித்தியாசமான ஒரு பேய் படமாக மர் மர் என்கிற பேய் படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது.
அதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த வகையான பேய் படங்கள் தாய்லாந்து ஜப்பான் மாதிரியான நாடுகளில் அதிகமாக எடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் தமிழில் பெரிதாக எடுக்கப்பட்டதே கிடையாது. நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் அந்த மாதிரி காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கும்.
அதாவது நிஜமாகவே கேமராவில் பேய்களை படம் பிடித்தது போன்ற ஆவணப்படம் வடிவில் இந்த படங்கள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் முதன்முறையாக தமிழ் சினிமாவில் மர் மர் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
எனவே இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ட்ரைலரை பார்த்தவரை திரைக்கதையை பொறுத்தவரை படம் அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பது போல தெரியவில்லை.
மேலும் படத்தை தயாரித்த விதத்திலும் ஹாலிவுட் படங்களுக்கு இணையான ஒரு தரத்தினை பார்க்க முடியவில்லை. ட்ரைலரிலேயே நடிக்கும் நட்சத்திரங்களிடம் பெரிதாக நடிப்பை பார்க்க முடியவில்லை.
எனவே இந்த படத்தை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு இனி வரும் திரைப்படங்கள் இதைவிட சிறப்பாக எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
