Connect with us

விஷாலுக்கு இது கம் பேக் இல்ல!.. இயக்குனருக்குதான் கம்பேக் – மார்க் ஆண்டனி பட விமர்சனம்!..

Movie Reviews

விஷாலுக்கு இது கம் பேக் இல்ல!.. இயக்குனருக்குதான் கம்பேக் – மார்க் ஆண்டனி பட விமர்சனம்!..

Social Media Bar

 தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இறுதியாக வந்த லத்தி திரைப்படம் கூட பெரிதாக அரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் நடிகர் விஷால் தற்சமயம் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்திற்கு மக்கள் அதிக வரவேற்பு அளித்து வருகின்றனர். இது விஷாலுக்கு ஒரு கம்பேக் திரைப்படம் என கூறுகின்றனர்.

ஆனால் உண்மையில் இந்த திரைப்படம் இயக்குனருக்குதான் பெரிய கம்பேக் ஆகும். இந்த படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன்பு நடிகர் சிம்புவை வைத்து ட்ரிபிள் ஏ என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது.

அதற்கு பிறகு வெகு காலங்கள் கழித்து தற்சமயம் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன்.

படத்தின் கதை:

1980 களில் இரண்டு நபர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அப்போது அவர்கள் இருவரிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சண்டையிடுகின்றனர். அதன் காரணமாக இருவரில் ஒருவர் இறக்கிறார்.

அதற்கு பின்பு நிகழ்காலத்தில் அவர்கள் இருவரது மகன்களும் நண்பர்களாகின்றனர். ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் கூட சண்டை நிகழ்கிறது.  இந்த நிலையில் இந்த இரண்டு காலக்கட்ட சண்டையையும் சரி செய்ய உதவும் ஒரு கருவியாக டைம் ட்ராவலர் போன் என்கிற கருவி வருகிறது.

அதை வைத்து இவர்கள் செய்யும் காரியங்களே படத்தின் கதையாக இருக்கிறது. 1980 காலக்கட்டத்தை திரைப்படத்தில் மிக சிறப்பாக காட்டியிருந்தனர். இந்த படம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top