Tamil Cinema News
ஒரு லெவல்ல அந்த கதாபாத்திரத்தை பார்த்து பயம் வந்துச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த மெட்டி ஒலி செல்வம்.!
ஒரு காலக்கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சன் டிவி சீரியலில் முக்கியமான சீரியலாக மெட்டி ஒலி சீரியல் இருந்து வந்தது. மெட்டி ஒலி சீரியல் பெரும்பாலும் சாதாரண குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை பேசும் வகையில் இருந்தது.
இப்போது உள்ள சீரியலை போல மாமியார் விஷம் வைப்பது, ஆள் வைத்து கடத்துவது போன்ற விஷயங்கள் எல்லாம் இல்லாமல் ஒரு குடும்பத்தில் நடக்கும் சிக்கல்களை அடிப்படையாக கொண்டு மெட்டி ஒலி சிரீயலின் கதை அமைப்பு அமைந்திருந்தது.
இதனாலேயே வெகு ஜனங்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் மெட்டி ஒலி சீரியலில் மிக பிரபலமான கதாபாத்திரமாக செல்வம் என்கிற கதாபாத்திரம் இருந்தது. மாணிக்கத்தின் தம்பி கதாபாத்திரமான செல்வம் கதாபாத்திரத்திற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வந்தனர்.
நடிகர் விஷ்வாதான் இதில் செல்வம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் மெட்டி ஒலியில் நடித்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும்போது நிஜ வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு கதாபாத்திரம்தான் செல்வத்தின் கதாபாத்திரம்.
ஒரு சமயத்திற்கு பிறகு நான் நிஜமாகவே செல்வமாக மாறிவிடுவேனோ என்கிற பயம் எனக்கு இருந்தது. அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தோடு ஊறி போயிருந்தேன் என கூறியுள்ளார் விஷ்வா.
