Cinema History
5 மாசத்துக்கு அதுதான் ரூல்ஸ்!. ஏ.வி.எம் சரவணனுக்கு பயம் காட்டிய எம்.ஜி.ஆர்!..
AVM saravanan and MGR : எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவரது திரைப்படங்களுக்கான விதிமுறைகள் என்பது அவர் விதிப்பதுதான். அவரிடம் சென்று தயாரிப்பாளரோ இயக்குனரோ எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது.
அப்படி அவர்கள் ஏதாவது சொல்லி எம்.ஜி.ஆர் கோபப்பட்டுவிட்டால் அந்த படமே அதோடு நின்றுவிடும். அவ்வளவு கோபக்காரர் எம்.ஜி.ஆர். அதனால்தான் சந்திரபாபுவிற்கு கூட ஒரு படத்தை பாதிக்கு மேல் நடித்து கொடுக்காமலே விட்டுவிட்டார் எம்.ஜி.ஆர்.
இதனாலேயே எம்.ஜி.ஆரை வைத்து மட்டும் படம் தயாரிக்காமல் இருந்தது ஏ.வி.எம் நிறுவனம். ஆனால் அன்பே வா படத்தின் கதையை கேட்டப்போது அதை எம்.ஜி.ஆரை வைத்து எடுக்கலாம் என முடிவு செய்தது ஏ.வி.எம் நிறுவனம்.
1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படத்திற்கான பூஜை போடப்பட்டது. அந்த படத்தை 1966 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார் ஏ.வி.எம் சரவணன். ஆனால் அதற்கிடையே 5 மாதம்தான் இருந்தது. எம்.ஜி.ஆர் மற்ற படங்களுக்கு நடிக்காமல் தனது படத்திற்கு மட்டும் நடித்தால்தான் அந்த படத்தை 5 மாதங்களில் முடிக்க முடியும்.
ஆனால் இதை எம்.ஜி.ஆரிடம் கேட்டு அவர் இதனால் கோபப்பட்டுவிட்டால் படப்பிடிப்பே நடக்காமல் போய்விடும் என்கிற பயமும் ஏ.வி.எம் சரவணனுக்கு இருந்தது. இருந்தாலும் எம்.ஜி.ஆரை சந்தித்து 5 மாதத்திற்கு தனது படத்தில் மட்டும் நடிக்க முடியுமா என கேட்டுள்ளார்.
அதற்கு யோசித்த எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீரப்பன் படத்தில் நான் ஏற்கனவே நடித்து வருகிறேன். அவர் இதற்கு எந்த ஆட்சேபனையும் கூறவில்லை எனில் நான் நடித்து தர தயார் என்றார் எம்.ஜி.ஆர். ஆர்.எம் வீரப்பனும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
அன்பே வா திரைப்படமும் அடுத்த வருடம் ஜனவரி 14 பொங்கல் அன்று வெளியானது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்