100 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் ஆன எம்.ஜி.ஆர் படம்!.. ஆடிப்போன திரையரங்கம்!.
தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்ஜிஆர். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், வெகு காலம் போராடிய பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் தத்துவ பாடல்கள் மூலமும் தனது படத்தின் திரைக்கதை மூலமாகவும் பல நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார் எம்.ஜி.ஆர்.
இதனால் போகப் போக மக்களின் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒரு நடிகராக எம்.ஜி.ஆர் மாறினார். என்னதான் எம்.ஜி.ஆர் ஒரு புரட்சி தலைவராக இருந்தாலும் அவரது திரைப்படங்களில் பெரும்பாலும் ஆக்ஷன் காட்சிகளே நிரம்பி இருந்தன.
சென்டிமென்ட் காட்சிகள் குறைவாகவே இருந்தன. ஏனெனில் எம்.ஜி.ஆருக்கு செண்டிமெண்டாக அவ்வளவாக நடிக்க வராது. இந்த நிலையில் செண்டிமெண்ட் கலந்து ஒரு திரைப்படம் நடித்து அதை ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர்.

அப்படி எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம்தான் இதயவீணை இதய வீணை. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இந்த திரைப்படம் எங்கு பார்த்தாலும் நல்ல ஹிட் கொடுத்தது. முக்கியமாக மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி ஓடியது அந்த திரைப்படம். தமிழ் சினிமாவிலேயே அப்படி ஒரு வரலாற்றை படைத்தது அந்த இதயவீணை திரைப்படம் தான்.