News
எம்.ஜி.ஆரின் அந்த விதிமுறைதான் காரணம்!.. அதுனாலதான் சிவாஜி நடிச்ச அந்த மாதிரி படங்களில் இவர் நடிக்கலை!..
தமிழ் சினிமாவின் வரலாற்றில் இரு பெரும் முக்கிய நடிகர்களாக வலம் வந்தவர்கள் எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
அவர்களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த இரு பெரும் ஜாம்பவான்கள் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இருவரும் நடிப்பின் மூலம் மக்களுக்கு பல செய்திகளை கொடுத்துள்ளார்கள். மேலும் இவர்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடினார்கள்.
தமிழ் சினிமாவில் இப்பொழுது இருக்கும் விஜய் மற்றும் அஜித், ரஜினி மற்றும் கமல் போன்று அப்பொழுது எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்று தான் கூறுவார்கள். தமிழ் சினிமாவிற்காக இவர்கள் ஆற்றிய பங்கு ஏராளம். திரையில் மட்டும் நடிகர்களாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் நடிகராக இருக்க வேண்டும் என்று இருவரும் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் இருவரும் சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது தனித்துவமாக இருக்கும். அந்த வகையில் எம்ஜிஆர் தனக்கென தனி ஒரு வரைமுறையை வைத்திருந்தார். அதனால் தான் சிவாஜி கணேசன் நடித்திருக்கும் ஒரு சில படங்களின் சாயலை இவர் தேர்ந்தெடுக்காமல் இருந்திருக்கிறார். அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிவாஜி கணேசன் பல சரித்திரம் மற்றும் புராண படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் சரித்திர வீரர்களின் கதாபாத்திரங்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற பல திரைப்படங்கள் வசனத்திற்காகவே பெயர் பெற்றவை.

மேலும் விடுதலைப் போராட்ட வீரர்களான கட்டபொம்மன், வ. உ. சி, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்றவர்களின் வேடங்களை ஏற்று நடித்து மக்களுக்கு வீரர்களின் தியாகத்தை உணர்த்தினார்.
மேலும் அவர் புராண படங்களில் நடித்து வந்தார் இந்த படங்களின் மூலம் அவர் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருந்தார். “திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர்” போன்ற பல புராண படங்களில் நடித்து அந்த படத்தின் மூலமும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். மேலும் மது பிரியராக சிவாஜி பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறாக பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகர் திலகம் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து “கூண்டுக்கிளி” என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆர் விதித்த விதிமுறை
எம்.ஜி.ஆர் “சதிலீலாவதி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு “மலைக்கள்ளன்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தார். அதன் பிறகு 1955 ஆம் ஆண்டு வெளிவந்த “அலிபாபாவும் 40 திருடர்களும்” என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். அடுத்து “ரிக்ஷாக்காரன்” படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். “உலகம் சுற்றும் வாலிபன்” போன்ற பல படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

இதில் கவனித்தோம் என்றால் எம்.ஜி.ஆர் எந்த ஒரு புராண கதைகளிலும் நடித்திருக்க மாட்டார். மேலும் புகைபிடித்தல் மது அருந்துதல் போன்ற எந்த ஒரு காட்சியிலும் அவர் நடிக்க மறுத்தார். ஏனெனில் எம்.ஜி.ஆர் திராவிட கொள்கைகளை பின்பற்றி வந்தார். இறை நம்பிக்கைக்கு எதிராக திராவிட கொள்கை இருந்ததால் அவர் சாமி படங்களில் நடிக்க வில்லை. மேலும் மக்களுக்கு மூட நம்பிக்கை மற்றும் கெட்ட பழக்கங்களை ஊக்குவிக்கும் படங்களிலும் நடிக்க கூடாது என தனக்கு தானே விதிமுறை போட்டிருந்தார். அதனால் பேய் படங்கள், மது, சிகரெட் அருந்துவது போன்ற காட்சிகளை நிராகரித்தார்.
