அந்த விஷயத்தில் எல்லாம் உங்களுக்கு சந்தேகம் வர கூடாதே!.. மைக் மோகனுக்கு பதிலடி கொடுத்த இளையராஜா..!
1980 களில் கொடிகட்டி பறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள்தாம். இளையராஜா இசையமைக்கும் படங்கள் பலவும் அப்போது ஹிட் கொடுத்து வந்தன.
இளையராஜா இசையமைக்கிறார் என்பதாலேயே ஹிட் கொடுத்த படங்களும் தமிழ் சினிமாவில் உண்டு. இதனால் இளையராஜாவுக்கே அவரது இசை மீது அபரிவிதமான நம்பிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் நடிகர் மைக் மோகன் இளையராஜாவின் இசை மீது சந்தேகப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
மாஸ்ட்ரோ இளையராஜா:
இசையமைப்பாளராக இளையராஜா பிரபலமானவராக இருந்த மாதிரியே நடிகராக மைக் மோகனும் கூட மிக பிரபலமானவராக இருந்து வந்தார். இந்த நிலையில் பெரும்பாலும் மைக் மோகன் படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்து வந்தார்.

அந்த வகையில் உதயகீதம் திரைப்படத்திற்கும் இளையராஜாதான் இசையமைத்தார். அதிலும் மேடை பாடகராகதான் மைக் மோகன் நடித்திருப்பார். அதில் அவருக்கு தூக்கு தண்டவனை வழங்கும் முன்பு ஒரு குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக அவர் பாட்டு பாடும் காட்சி வரும்.
பிழை சொன்ன மோகன்:
ஆனால் அந்த பாடல் கொஞ்சம் மெதுவாக செல்வதாக மைக் மோகனுக்கு தோன்றியது. எனவே அவர் இந்த பாடலை கொஞ்சம் வேகமான பாடலாக வைக்கலாம் அல்லவா. க்ளைமேக்ஸிற்கு முந்தைய காட்சி இது கதை ஓட்டத்திற்கு ஏற்ற அளவில் பாட்டு இல்லையே என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த இளையராஜா இசையில் நான் வேகத்தை கூட்டியுள்ளேன். அதனால் பாடல் சரியாக இருக்கும் என கூறியுள்ளார். அதே போல உதயகீதம் பாடுவேன் என்கிற அந்த பாடலுக்கு வரவேற்பு கிடைத்தது.