News
சன் டிவிக்கு வந்ததுமே விருது கிடைச்சிடுச்சு.. ஆனந்த கண்ணீர் விட்ட குக் வித் கோமாளி பிரபலம்!..
குக் வித் கோமாளி நிகழ்ச்சி சினிமா துறையில் பலருக்குமே நல்ல வெற்றியை பெற்று கொடுத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பல நிகழ்ச்சிகள் அதில் கலந்துக்கொள்பவர்களை அதிக பிரபலமாக்கும் நிகழ்ச்சிகளாக இருந்து வருகின்றன.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் கொஞ்சம் பிரபலமான நிகழ்ச்சி என்று கூறலாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொறுத்தவரை அதில் கலந்துக்கொள்ளும் குக் மற்றும் கோமாளி இருவருக்குமே மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு கிடைத்துவிடும்.
அந்த வகையில் விஜய் டிவியின் வழியாக பிரபலமானவர்தான் நடிகை மோனிஷா ப்ளஸி. இவர் எம்.எஸ்.சி எலக்ட்ரானிக் மீடியா படிப்பை முடித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் இந்த படிப்பில் முதல் ரேங்க் எடுத்துள்ளார் இவர்.

தற்சமயம் சன் டிவியில் வெங்கடேஷ் பட் நடத்தும் டாப் குக் டூப் குக் என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார் மோனிஷா ப்ளஸி. இந்த நிலையில் 2023 ஆண்டிற்காக விகடன் நடத்திய விருதுகள் விழாவில் சிறந்த 10 இளைஞர்களுக்கான விருதில் மோனிஷா ப்ளஸ்ஸிக்கும் விருது வழங்கியுள்ளனர்.
இதுக்குறித்து மோனிஸா ப்ளஸி கூறும்போது எனது வெற்றிக்கு என் பெற்றோர்கள்தான் காரணம். நான் நிறைய முறை தோற்று போயுள்ளேன். ஆனால் ஒவ்வொரு முறை நான் தோற்று போகும்போதும் என்னை தேற்றுவது எனது பெற்றோர்தான் என கூறியுள்ளார் மோனிஷா ப்ளஸி.
